தமன்குமார் ஒரு நொடி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதே அணியினர் இணைந்துள்ள ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடி வருகிறது. இந்நிலையில் கோவைக்கு வந்த ஜென்ம நட்சத்தி்ரம் படக்குழுவினர் திரையங்கரத்திற்கு உள்ளே சென்று ரசிகர்களை சந்தித்து பேசினர்.
குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிரட்சியை ஏற்படுத்தும் என்பதால் கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து ரசித்துள ளதாக படத்தின் நாயகன் தமன் மற்றும் நடிகை மால்வி மல்ஹோத்ரா தெரிவித்தனர். படத்தின் இயக்குனர் மணிவர்மன் கூறுகையில், கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருந்தாலும்,ஜென்ம நட்சத்திரம் அதையும் தாண்டி ஹரர் மற்றும் த்ரில்லிங் என ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் தமன் கூறுகையில், தற்போது பெரிய படம் சிறய படம் என்ற வித்தியாசமில்லாமல் நல்ல படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதாக கூறினார். அதேபோல எப்படி 'ஒரு நொடி' படத்தின் கிளைமாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்ததோ அதுபோல இந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். என அவர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.