/indian-express-tamil/media/media_files/2025/09/10/joy-crizildaa-2025-09-10-17-16-26.jpg)
வயிற்றில் இருக்கும் கருவை கலைத்துவிடு, குழந்தை வேண்டுமா? இல்ல நான் வேண்டுமா என்று கேட்டு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கேரவனில் வைத்து தாக்கினார் என்று ஜாய் கிரிசில்டா கூறியுள்ள நிலையில்’, இந்த உண்மையை நான் தான் வெளியில் கொண்டுவா சொன்னேன் என்று அவரின் தாயார் கூறியுள்ளார்.
பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சியில் சமையல், கேட்டரிங் செய்வதன் மூலம் புகழ்பெற்ற மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் என இரு திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் ரங்கராஜ்க்கு ஸ்ருதி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனனர். இதனிடையே சமீபத்தில் ரங்கராஜ் தன்னை 2-வது திருமணம் செய்துகொண்டதாக காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா கூறினார்.
இந்த தகவல் மற்றும் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், கிரிசில்டா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தைக்கு பெயர் ராஹா ரங்கராஜ் என்றும் கூறியிருந்தார். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், என் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என்று கூறி, கிரிசில்டா சென்னை காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ரங்கராஜ் தனக்கு அனுப்பிய பர்னல் மெசேஜ், மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து யூடியூப் சேனல்களில் ரங்கராஜ் குறித்து பேசி வரும் கிரிசில்டா, தற்போது அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அபியூஸ் செய்ததாகவும் கூறியுள்ளார். சிவசங்கரி டாக்கிஸ் என்ற யூடியூப் சேனலில் தனது அம்மாவுடன் பேட்டி அளித்த கிரிசில்டா, ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்துது. ஒரு கட்டத்தில் அவர் என்னை அடிக்க தொடங்கினார் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் என்னை ஃபிசிக்கல் அபியூஸ் செய்ய தொடங்கினார். அவர் அடித்ததில், எனக்கு ஒரு காது கேட்டாமல் போய்விட்டது. இதற்கு சர்ஜரி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். அடித்து முடித்தவுடன் அவரே ஹாஸ்பிடல் அழைத்து செல்வார். என் மகனுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவன் தான் என்னை ரங்கராஜ் அடித்ததாக, என் அம்மாவிடம் சொல்லிவிட்டான். வீட்டில் இருக்கும்போது அடித்தது போக, வெளியில் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் வைத்து அடித்திருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ஷூட்டிங்கில் இருக்கும்போது, கேரவனில் வைத்து மேனேஜர் சப்போர்ட்டுடன் அடித்தார். காதல் மனைவியாக அதையெல்லாம் ஏற்றுக்கொண்டேன்.
4 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது, கருவை கலைத்துவிடு என்று சொன்னார். இந்த குழந்தை வேண்டுமா? நான் வேண்டுமா? குழந்தை வேண்டும் என்றால் நான் போய்விடுவேன் என்று பிளாக்மெயில் செய்தார். அதில் இருந்துதான் பிரச்னை தொடங்கியது என்று கிரிசில்டா கூறியுள்ளார். அதேபோல் கண்பார்வை இல்லாத அவரது அம்மா, என் மகளை நான் தைரியத்துடன் வளர்த்து இருக்கிறேன். இதுபோன்ற பெண்கள் வெளியில் சொல்ல வேண்டும். ரங்கராஜ் போன்ற ஆட்கள் இனி எழவே கூடாது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.