/indian-express-tamil/media/media_files/2025/09/06/rangaraj-criz-2025-09-06-07-43-06.jpg)
மாதம்பட்டி ரங்கராஜா – ஜாய் கிரிசில்டா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிரிசில்டாவின் குற்றச்சாட்டுக்கு ரங்கராஜ் இதுவரை எந்த பதிவும் சொல்லவில்லை. இதனிடையே, பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்." தர்மம் ஜெயிக்கும் என்று கிரிசில்டா பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் திருணத்திற்கு கேட்ரிங் சர்வீஸ் செய்து அசத்தி வருபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து பென்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து சமீபத்தில், தனது 3-வது படத்திற்கான பூஜை போடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரங்கராஜ் நடுவராக இருந்து வருகிறார்,
ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ்க்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அவர், தனது காஸ்டியூம் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நேரடியாக பதில் சொல்லவில்லை தனது சமூகவலைதள பதிவுகளின் மூலம் மறைமுகமாக ரங்கராஜ் பல பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் தனது காஸ்டியூம் டிசைனரை மாற்றியதாககும் குறிப்பிட்டிருந்தார்.
அதே சமயம், ஜாய் கிரிசில்டா தான் ரங்கராஜ் குழந்தையை வயிற்றில் சுமப்பதாகவும், அதற்கு ராஹா ரங்கராஜ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் புகைப்படங்கள் வெளியிட்டு வந்த நிலையில், சமீபத்தில், ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் கர்ப்பமாக இருக்கும்போது இந்த குழந்தையை அழித்துவிடு என்று கூறியதாகவும், தன்னுடன் வாழ மறுக்கிறார் என்றும் குற்றம்சாட்டி, காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார், இந்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு, ரங்கராஜ் வேலை பிஸியில் இருந்தபோது, தனக்கு அனுப்பிய ஒரு வீடியோவை வெளியிட்டார். இதில் ரங்கராஜ், ஹாய் பொண்டாட்டி மிஸ்யூ என்று பல ஆசை வார்த்தைகளை கூறியிருந்தார். ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தாலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் இதுவரை நேரடியாக பதில் சொல்லவில்லை. இதனிடையே, தற்போது ஜாய் கிரிசில்டா புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்."
— Joy Crizildaa (@joy_stylist) September 5, 2025
தர்மம் ஜெயிக்கும்
இந்த பதிவில், "பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்." தர்மம் ஜெயிக்கும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், கிரிசில்டாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.