மேக்கப் மேன் உள்ளே வந்தா அடி உதைதான்; இதை ஜீரணிக்கவே முடியல: காதல் படம் குறித்து பரத் ஓபன் டாக்!
கடந்த 2004-ம் ஆண்டு, பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான படம் தான் காதல். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார்.
கடந்த 2004-ம் ஆண்டு, பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான படம் தான் காதல். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார்.
நடிகர் பரத் பல படங்கள் நடித்திருந்தாலும, இன்றுவரை அவருக்கு அடையாளமாக திகழ்வது காதல் படம் தான். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisment
கடந்த 2004-ம் ஆண்டு, பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான படம் தான் காதல். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். பரத், சந்தியா ஆகியோருடன், காதல் தண்டபாணி, காதல் சுகுமார், உள்ளிட்ட பல புதுமுக நடிகர்கள் நடித்திருந்தனர். அதேபோல், தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சூரி கூட இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார்.
ஒரு பள்ளி மாணவிக்கும் மெக்கானிக் பையனுக்கும் இடையில் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் ஒரு காட்சியாக அமைந்தது. படத்தில் ஹீரோயினாக நடித்த சந்தியா, அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்த நிலையில், சந்தானத்திற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள நடிகர் பரத், படத்தில் அனைத்தும் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரிஜினல் மெக்கானிக் உடையை கொடுத்தார்கள். அதேபோல் மேக்கப் மேன் உள்ளே வந்தால் அடித்து விரட்டிவிடுவார். சந்தியா முகத்தில் பவுடர் இருப்பதை பார்த்தால் கூட அவ்வளவு தான். லிப்ஸ்டிக் பார்த்தால் என்றால் அவ்வளவு தான் முடிந்தது என்று நினைத்துக்கொள்ளலாம். எனக்கும் படத்தில் மேக்கப் கிடையாது. முகத்தில் கருப்பாக பூசுவார்கள்.
Advertisment
Advertisements
மெக்கானிக் என்பதை ரியலாக காட்ட வேண்டும் என்பதற்காக, கருப்பு பூசி, கிரிஸ் போட்டு செய்வார்கள். இப்படித்தான் எங்கள் நிலைமை இருந்தது. மெக்கானிக் ப்ரண்ட்ஸ் எனக்கு நிறையபேர் இருந்தார்கள். அதனால் அந்த படத்தில் மெக்கானிக் உடை அணிந்தது எனக்கு புதிதாக இல்லை. பைக்கில் சைடில் உட்கார்ந்து ஓட்டுவது, மதுரை ஸ்லாங் எல்லாமே புதிதாக இருந்தது. இந்த உடையை அணிந்து நடிப்பது ஒரு வாரம் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று பரத் வெளிப்படையாக பேசியுள்ளார்.