/tamil-ie/media/media_files/uploads/2021/02/kalaimamani.jpg)
Tamilnadu Kalaimaamani Award : கலை மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கும், தொன்மையாக கலை வடிவங்களை பாதுகாக்கவும் உதவும் கலைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் கடந்த 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு காலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பழம்பெறும் நடிகைகளான, சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடிகர் ராமராஜன், தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வலம வரும் சிவகார்த்திகேயன், முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தயாரிப்பார் ஐயரி கணேஷ், மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான் கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள்:
நடிகர்கள்
ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு
நடிகைகள்
சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா
இசையமைப்பாளர்கள், பாடகர்கள்
டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து.
தயாரிப்பாளர்கள்
கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ்
இயக்குனர்கள்
கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா
சீரியல் நடிகர்கள்
நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா
நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி, ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும், தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.