Advertisment

ஒரே ஃபிரேமில் இரண்டு கஜினி... கமல்ஹாசன் பிறந்த நாள் க்ளிக்ஸ் வைரல்

உடல்நலக்குறைவால் பாதிகக்ப்பட்டுள்ள தனது தாயின் சிகிச்சைக்காக தற்போது சென்னையில் தங்கியுள்ள நடிகர் அமீர்கான், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Birthday

கமல்ஹாசன் பிறந்த நாள் விழாவில் அமீர்கான் - சூர்யா

சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் அமீர்கான், சூர்யா அமீர் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று இரவு சென்னையில் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக அமீர்கான் பங்கேற்றார்.

உடல்நலக்குறைவால் பாதிகக்ப்பட்டுள்ள தனது தாயின் சிகிச்சைக்காக தற்போது சென்னையில் தங்கியுள்ள நடிகர் அமீர்கான், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில், தமிழ் நடிகர் சூர்யாவுடன் அமீர் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர்கள் விருந்தினருடன் சேர்ந்து சிரித்து, போஸ் கொடுக்கும் படத்தைப் பகிர்ந்த ஒருவர், "கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் ஒரே பிரேமில் இரண்டு கஜினிகள்" என்று எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு தமிழில் வெளியான கஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த இரு படங்களிலுமே அசின் நாயகியாக நடித்திருந்தார்.

கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில், சூரியா வெள்ளை நிற ஆடை மற்றும் பழுப்பு நிற சன்கிளாஸில் இருந்தார். அமீர் மெரூன் குர்தா அணிந்து கண்ணாடியுடன் போஸ் கொடுத்திருந்தார். அவர்களின் இந்த பதிவுக்கு ட்விட் செய்துள்ள ரசிகர் ஒருவர், , "இருவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி" என்றும், மற்றொருவர், "இரண்டு மெகா ஸ்டார்கள் ஒன்றாக" என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், அமீர் உடனான செல்ஃபியையும் பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், பகிர்ந்துள்ளார். அவர்களின் படத்துடன் அவர் பகிர்ந்த ஒரு நீண்ட குறிப்பில், இந்திய திரையுலகில் அவருடைய படங்கள் மூலம், மிக உயர்வாக மதிக்கப்படும் சிறந்த நடிகர். ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்ய ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் மனிதர். நேற்றிரவு கமல் சார் பிறந்த நாளில் நடப்பவை(பவங்)களை ஒரு ஒதுக்கு புறமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அனைத்துக் கொண்டு நெற்றியில் என்னவென்று விசாரித்து, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சுகமில்லை என வருந்தி,அடுத்த படமென்ன?- தெரிந்துக் கொண்டு,பின்னர் திரும்பிச் செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்.

எங்கே சென்றார்? இதயத்தின் நாற்புறமும் ஆணியடித்து அங்குமிங்கும் நகரா நாற்காலியிட்டு அமர்ந்துக் கொண்டார். இத்தனைக்கும் சிற்சில சந்திப்பே இதற்குமுன்என் விடாமுயற்சிகளை பற்றி கேட்டறிந்து என்னை அவர் பாராட்டவும்,அவரின் நல்ல படங்களை நான் புகழவும் பழகினோம். அவரின் அற்புத நட்பு அலாதியானது. மணி சார்+கமல் சார்+ ரஹ்மான் சார்+ ரவி k சந்திரன் கூட்டனி மிரட்டியது ‘thug life’-ல்! என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Update Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment