Advertisment

2024-ல் பெரிய ஓப்பனிங் பெற்ற தமிழ் படம்: இந்தியன் 2 முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்தியன் 2 படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Indian 2 Accident, Kamal Haasan

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன்

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ள நிலையில், படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் இன்றும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. 90-காலக்கட்டத்தில் பெரிய வெற்றிபடங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியன் படத்தின் 2-ம் பாகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளது.

முதல் படத்தை இயக்கிய ஷங்கரே இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியன் 2 படம் இந்தியா முழுவதும் சுமார் 7,801 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் 35-40 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வர்த்தக இணையதளமாக சானிக்லானிக் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு வெளியாக தமிழ் படங்களில் பெரிய ஓப்பனிங் வசூல் பெற்ற முதல் படமாக இந்தியன் 2 உள்ளது. இந்தியன் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாக முன்பதிவில், இந்தியாவில் ரூ15 கோடி வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் ரூ10 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

இதன் மூலம் இந்தியன் 2 உலகளவில் முதல்நாள் வசூலில் சுமார் ரூ40 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த வாரம் வெளியான பிரபாஸின் கல்கி திரைப்படத்தின் வசூலை இந்தியன் 2 தடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் வெளியாகி 2 வாரங்களுக்கு பிறகு தமிழகத்தில் 32 கோடி வசூலித்த கல்கி திரைப்படத்தின் வசூலை இந்தியன் 2 முறியடிக்க வாய்ப்புள்ளது.

கமல்ஹாசனின் விக்ரம் 2 படம், 2022-ம் ஆண்டு உலகளவில் ரூ60 கோடி வசூலித்த நிலையில், இந்தியன் 2 படம் இந்த சாதனையை முறியடிக்கிறதா அல்லது அதன் அருகில் செல்கிறதா என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian 2 Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment