New Update
/indian-express-tamil/media/media_files/NZHtUbqY4rnJS9GqVf5W.jpg)
இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோ
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியன் 2 க்ளிம்ஸ் வீடியோ
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லஞ்சம் ஊழல் உள்ளிட்ட சமூக விரோதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வரும் நிலையில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தியன் 2 படம் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நாளை (நவம்பர் 3) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது இந்தியன் 2 படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியன் முதல் பாகத்தின் முடிவில் கமல்ஹாசன் பேசும் காட்சியுடன் தொடங்கும் இந்த க்ளிம்ஸ் வீடியோவில், நிழல்கள் ரவி கொலை செய்யப்படும் காட்சியும், மக்களிடம் லஞ்சம் வாங்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. மேலும் கம்பேக் இந்தியா என்ற பாடலுடன் சுமார் 2 நிமிடங்கள் கொண்ட இந்த க்ளிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.