Advertisment

7000-க்கு அதிகமான காட்சிகள்: முன்பதிவில் அசத்தும் இந்தியன் 2; கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்பதிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Indian 2 Kamal

இந்தியன் 2 படததில் கமல்ஹாசன்

2024-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் இன்றும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. 90-காலக்கட்டத்தில் பெரிய வெற்றிபடங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியன் படத்தின் 2-ம் பாகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளது.

முதல் படத்தை இயக்கிய ஷங்கரே இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் நாளை (ஜூலை 12) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. தமிழ் இந்தி தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் முன்பதிவு இதுவரை ரூ5.21 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்திற்கு முதல் நாளில், ரூ2.9 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது. குறிப்பாக தமிழ் பதிப்பில் மட்டும் 2.25 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் முதல்நாளில் இந்தியா முழுவதும் சுமார் 7,801 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரையரங்குகளில் ஒன்றாக இருக்கும் இந்தியன் பிரமாண்டமாக வெளிவரத் தயாராக இருப்பதால் முன்பதிவில் உச்சத்தை எட்டியுள்ளது. 

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, தெலுங்கு மற்றும் இந்தி மாநிலங்களில் படத்தின் பரபரப்பு சற்று பலவீனமாகத் தெரிகிறது; அனைத்து பகுதிகளிலும் உள்ள ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அப்டேட்களை பகிர்ந்து வருகின்றனர். முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதி, ஊழலை எதிர்த்துப் போராடும் விழிப்புணர்வாக மாறிய சுற்றி கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியன் கேரக்டர் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய கேரக்டராக மாறியுள்ளது. இதன் தொடர்ச்சி, விழிப்புள்ள நீதியின் உணர்வை மீண்டும் தூண்டுவதாகவும், பார்வையாளர்களுக்கு பரபரப்பான சினிமா அனுபவத்தை வழங்குவதாகவும் உறுதியளிக்கிறது. மேலும் இந்தியன் 2 படம்  பாக்ஸ் ஆபிஸில் தாக்கத்தை ஏற்படுத்தவும், முதல் பாகத்தின் வெற்றியை தக்கவைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment