நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடித்து வரும் கங்கனா ரனாவத், சந்திரமுகி 2 படத்தின் க்ளைமேக்ஸ் பாடல் காட்சிக்கான ஒத்திகையை தொடங்கியுள்ளார்.
2008-ம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். தொடந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைவி படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படிப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கங்கனா சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், “சந்திரமுகி 2 படத்தின் க்ளைமாக்ஸ் பாடலுக்கான ஒத்திகையை கலா மாஸ்டர் ஜியுடன் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். பாடலை கோல்டன் குளோப் வின்னர் ஸ்ரீ எம்.எம். கீரவாணி ஜி இசையமைத்துள்ளார், புகழ்பெற்ற ஸ்ரீ பி. வாசு ஜி இயக்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் பி.வாசு கூட்டணியில் வெளியான சந்திரமுகி படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. இந்த படத்தின் 2-ம் பாகமாக தற்போது சந்திரமுகி 2 தயாராகி வருகிறது. அழகு மற்றும் நடனத் திறமைக்கு பெயர் பெற்ற கங்கனா தனது இந்த படத்தில் அரசனின் அவையில் நடனக் கலைஞர் கேரக்டரில் நடிக்கிறார்.
ட்விட்டரைத் தவிர, கங்கனா தனது இன்ஸ்டாகிராமிலும் தனது பாடல் ஒத்திகை தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த படம் கங்கனாவின் கடைசி ஹிந்தி படத்தை விட மிகவும் சவாலான கேரக்டரில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா நடித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்த கங்கனா இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் அனுபவித்த கஷ்டங்கள் பற்றிய விரிவான பதிவை வெளியிட்டிருந்தார். “எனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைப்பது முதல் எனக்குச் சொந்தமான ஒவ்வொரு பொருளையும் முதல் ஷெட்யூலின் போது டெங்கு நோயால் கண்டறியப்பட்டது மற்றும் ஆபத்தான முறையில் குறைந்த இரத்த அணுக்களின் எண்ணிக்கை இருந்தபோதிலும் அதைப் படமாக்கியது வரை, ஒரு தனிநபராக எனது கதாபாத்திரம். கடுமையாக சோதிக்கப்பட்டது. என் உணர்வுகளைப் பற்றி நான் மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தேன்.
ஆனால் நான் இதையெல்லாம் பகிரவில்லை, ஏனென்றால் தேவையில்லாமல் கவலைப்படுபவர்கள் மற்றும் நான் வீழ்ச்சியடைவதைப் பார்க்க ஆசைப்படுபவர்கள் என்னை கஷ்டப்படுத்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். என் வலியின் இன்பத்தை அவர்களுக்கு கொடுக்க நான் விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/