தீபாவளி தினத்தில் திரைக்கு வராதது ஏன்? கங்குவா தரப்பு விளக்கம்!

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகாதது ஏன் என்பது குறித்து தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகாதது ஏன் என்பது குறித்து தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kanguva Surt

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த படம் ஏன் தீபாவளி தினத்தில் வெளியாகவில்லை என்பது குறித்து படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சூர்யா நடிப்பில், அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோருடன், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்தை ஸ்டூயோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நலையில், தற்போது நவம்பர் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே சென்னையில் நடைபெற்ற கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.  2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சூர்யா நடிப்பில் படம் வெளிளாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதன் காரணமாக கங்குவா படம் குறித்து சமூகவலைதளங்களில் பிரமோஷனை அதிகரித்து வரும் நிலையில், இந்த படம் குறித்தும் நடிகர் சூர்யா குறித்து அவ்வப்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.  முதலில் கங்குவா கடந்த அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தினத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியானதால், கங்குவா படம் தள்ளிப்போனது. அடுத்து தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment
Advertisements

தீபாவளி தினத்தில் அமரன், பிரதர், பிளாடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியானதால், தற்போது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கங்குவா தனி படமாக நவம்பர் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தீபாவளி தினத்தில் ஏன் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட்டிருந்தால், சுமார் 4000-5000 திரையரங்குகள் தான் கிடைத்திருக்கும். ஆனால் வருகிற 14-ந் தேதி வெளியிட்டால், 11500-க்கு அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

actor surya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: