/indian-express-tamil/media/media_files/P1STwHV8t3eAQ8EDTuKw.jpg)
கண்ணதாசன் - மன்மத லீலை போஸ்டர்
‘’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’’ இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலை கவியரசர் கண்ணதாசன் மாற்றி எழுதி இருப்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல்.
1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் மன்மத லீலை. கமல்ஹாசன், ஆலம், ஹேமா சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் ப்ளேபாய் வேடத்தில் நடித்திருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பார். தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகம் இருக்கும் நாயகன் மனைவி இருந்தாலும், தான் பார்க்கும் பெண்கள் அனைவரையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
அந்த வகையில் ஒரு பெண்ணுடன் கமல்ஹாசன் பழகுகிறார். அவரிடம் அன்பாக பேசும்போது அவர் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார்.
அதை கேட்ட கமல்ஹாசன், அப்போ நீங்க மிஸஸ் பிலிப்ஸ் என்று சொல்கிறார். அதன்பிறகு தான் ‘’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'', என்ற பாடல் ஒலிக்கும். இந்த ரேடியாவில் பாடல் ஒளிப்பது போலவும், அந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் பெயர்கள் சொல்லும் போது கடைசியாக சாந்தோம் விஸ்வநாதன் என்று எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயர் வரும். அதன்பிறகு அந்த பெண்ணின் கணவன் குடித்துவிட்டு இருப்பதும், அவரை கமல்ஹாசனும் அந்த பெண்ணும் அழைத்து வந்து படுக்க வைக்கும் காட்சிகள் வரும்.
இந்த பாடல் முழுவதுமே கமல்ஹாசன் அந்த பெண்னை அடைவதற்காக எப்படி அவரிடம் பேசுகிறார் என்பதையே பாடல் வரிகளாக வைத்திருப்பார் கண்ணதாசன். கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இந்த படத்தில் மனைவி அழகாக அமைந்திருந்தாலும், அவருக்கு ஏற்ற கணவன் தான் அமையவில்லை. அதனால் கணவன அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம், கனவு பளிக்கும் என உனக்கும் வாழ்வும் வரும் என்று தானே வர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இந்த பாடல் கணவனின் நிலையில் இருந்தோ அல்லது மனைவியின் நிலையில் இருந்தோ எழுதப்படவில்லை. மாறாக அவர்கள் வீட்டுக்கு வரும் 3-வது நபரால் பாடப்படும் ஒரு பாடல் அந்த இடத்தில் இருந்து தான் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்றும், இதற்கு தீர்வாக கவியரசர் கண்ணதாசன் பாடலின் கடைசியில், ‘’அழகி புரியாத பாலம் அடியேன் இருந்தென்ன லாபம்’’ என்ற வரிகளுடன் முடித்திருப்பார் என்று ஆலங்குடி வெள்ளச்சாமி என்பவர் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us