/indian-express-tamil/media/media_files/2025/09/11/tamil-cinema-kannadasan-2025-09-11-18-37-51.jpg)
தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும், தனது வரிகள் மூலம் உயிர்கொடுத்த கவியரசர் கண்ணதாசன், பல பாடல்களை எழுதியுள்ளார். அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ள கண்ணதாசன், தான் பாடல் எழுதி, ஜெமினி கணேசன் நடித்த ஒரு காட்சியை மட்டும் தனது பிள்ளைகள் அனைவருக்கும் போட்டு காட்டியுள்ளார்,
தமிழ் சினிமாவில், கவிஞர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் கவியரசர் கண்ணதாசன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தனது 14 வயதில், காரைக்குடியில் இருந்து சென்னை வந்துள்ளார். ஆனால் மெரினாவில் இறங்கிய அவருக்கு, அதற்கு மேல் போவதற்கு பணம் இல்லாதததால், அங்கேயே பெட்டியை தலைக்கு வைத்து தூங்கியுள்ளார். காலையில் யாரிடமாவது பணம் வாங்கி மன்னடிக்கு போய்விடலாம் என நினத்துள்ளார்.
அப்போது ஒரு போலீஸ்காரர் வந்து அவரிடம் எங்கிருந்து வருகிறார் என்று விசாரித்துள்ளார். கையில் காசு இல்லை. அதனால் இங்கு படுத்திருக்கிறேன் என்று கண்ணதாசன் சொல்ல, அந்த போலீஸ்காரர் எங்கே போக வேண்டும் என்று கேட்டுள்ளார். நான் மன்னடிக்கு போக வேண்டும் என்று சொல்ல, அப்போ கிளம்பு என்று அவர் கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், என்னிடம் பணம் இல்லை என்ற சொல்ல, பரவாயில்லை. இங்கிருந்து கிளம்பு இல்லனா எனக்கு நாளனா கொடு என்று கேட்டுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், மீண்டும் தன்னிடம் பணம் இல்லை என்று குறியுள்ளார்.
அவரின் பேச்சை கேட்டகாத போலீஸ், இங்கிருந்து கிளம்பு என்று சொல்ல, கண்ணதாசன் தன் பெட்டியை தலையில் வைத்துக்கொண்டு மெரினாவில் இருந்து மன்னடிக்கு நடந்தே சென்றுள்ளார். அப்போது இந்த மெரினா பீச்சில் நான் விட்ட கண்ணீர் ஒருநாள் மரமாக மாறும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே சென்றுள்ளார். அதன்பிறகு சினிமாவில் பாடல்கள் எழுதி பெரிய கவிஞராக மாறிய கண்ணதாசனுக்கு ஒரு சமயத்தில், ஜெமினி கணேசன் நடித்த சுமை தாங்கி படத்தை தயாரித்து அதில் பாடல்களையும் எழுதியுள்ளார்.
அந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஜெமினி கணேசனை அழைத்து வந்து மெரினா பீச் காந்தி சிலை அருகே நிற்க வைத்து பாடலை படமாக்கியுள்ளார். அந்த பாடலின் இடையில் அந்த சாலையில், 7 கார்கள் செல்லும் வகையில் படமாக்கியிருப்பார். இந்த காட்சி படமாக்கி முடிந்தவுடன், இந்த ஃபிலிமை மட்டும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த கண்ணதாசன், தன் பிள்ளைகள், மனைவிகள் என அனைவரையும் அழைத்து இந்த காட்சியை போட்டு காட்டியுள்ளார்,
இந்த மெரினா பீச்சில் காந்தி சிலை அருகில் இருந்து தான் உங்க அப்பான் காலனா காசு இல்லாமல், மன்னடிக்கு நடந்தே சென்றான். ஆனால் இப்போது ஜெமினி கணேசன் பாடும்போது அந்த காட்சியில் சென்ற 7 கார்களும் என்னுடைய சொந்த கார் என்று கூறியுள்ளார். எங்கே அவமானப்பட்டாரோ அதே இடத்தில் கண்ணதாசன் தனது சபதத்தை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளார். இந்த தகவலை பேச்சாளர் ஒருவர் தனது உரையில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.