தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் இன்றும் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசன், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனுடன் இணைந்து முதலிரவுக்கான பாடலை எழுதியதும், அதில் அவர் வைத்த கோட்ட வேடும் யாரும் அறிந்திடமாத ஒரு தகவல்.
Advertisment
மனிதனின் அத்தனை உணர்வுகளையும் தனது பாடலில் காட்டிய கவியரசர் கண்ணதாசன், தமிழ் சினிமாவுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல், எம்.எஸ்.விஸ்வநாதன் கே.வி.மகாதேவன் என பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், மனிதனில் ஏற்படும் அத்தனை உணர்ச்சிகளையும் தனது பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
தான் பாடல்கள் எழுதும்போது அதில் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பொருத்தி எழுதக்கூடிய கண்ணதாசன், காதல், காமம் என இல்லற உணர்வுகளுக்கு ஏற்படியான பாடல்களையும் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க வகையில், 2 முதலிரவு பாடல்களில் கோட்வேடு வைத்து எழுதியிருப்பார். இதில் ஒரு பாடல் மெலோடியாக எழுதியிருந்தாலும் மற்றொரு பாடல், விறுவிறுப்பாக செல்லும் வகையில் எழுதியிருப்பார்.
Advertisment
Advertisements
1965-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளியான படம் இதயக் கமலம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஆரூர் தாஸ் திரைக்கதை எழுதியிருந்தார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் வரும் ‘’மலர்கள் நனைந்தது பனியாலே’’ என்ற பாடல், முதலிரவுக்கான ஒரு மெலோடி பாடலாக இருக்கிறது.
இந்த பாடலில், தாம்பத்தியம் குறித்து கவியரசர் கண்ணதாசன், மறைமுகமாகவும், அது சமயம் எளிதில் புரியும் வகையிலும் வரிகளை அமைத்திருப்பார். குறிப்பாக இந்த பாடலில், முருகன், கண்ணன் ஆகிய கடவுளையும் இழுத்திருக்கும் கண்ணதாசன், ‘’கன்னத்தை பார்த்தேன் முன்னாடி, பட்ட காயத்தை காட்டியது கண்ணாடி என்ற வரிகளை சொல்லலாம். இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தவர் பி.சுசிலா.
அதேபோல், 1973-ம் ஆண்டு சிவாஜி கணேசன் சாப்பில் வெளியான எங்க தங்க ராசா படத்தில் வரும் ‘’இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்ற பாடல் இந்த பாடலிலும், கண்ணதாசன், தனக்கே உரிதான கோட்வேடுடன் முதலிரவு பாடலை அற்புதமாக எழுதியிருப்பார். குறிப்பாக இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை என்ற வரிகளை குறிப்பிடலாம்.
பாதி பாதியாய் இருவரும் மாறி பழகும் வித்தையே பள்ளியின் இன்பம். மாலை என்பதே இன்பம் இனி காலை என்பதே துன்பம் என்று எழுதியிருப்பார். இந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், காமத்தை கண்ணதாசன் சிறப்பாக மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“