தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி பல இசையமைப்பாளர்களிடம் கொடுத்த பின்னரும் அந்த பாடல் நிராகரிக்கப்பட்ட நிலையில், எம்.எஸ்.வியும் அந்த பாடலை நிராகரித்துள்ளார்.
மனித வாழ்வின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது எழுத்துக்கள் மூலம் உயிர் கொடுத்தவர் தான் கண்ணதாசன். எழுத்தாளர், கவிஞர், இயக்குனர், தயாரிப்பாளா என பன்முக திறமையுடன் இருந்த அவர், பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், அவர் எழுதிய ஒரு பாடலை, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தொடங்கி, எம்.எஸ்.விஸ்வநாதன் வரை பல இசையமைப்பாளர்கள் இந்த பாடலை கேலி செய்து நிராகரித்துள்ளனர். ஆனால் இந்த பாடல் மீது கண்ணதாசனுக்க பெரிய நம்பிக்கை இருந்துள்ளது.
அந்த நம்பிக்கையின் காரணமாக பல இசையமைப்பாளர்களிடம் கொடுத்துள்ளார். அந்த வகையில், 1962-ம் ஆண்டு வெளியான பலே பாண்டியா திரைப்படத்தில், இந்த பாடலை சேர்க்கமாறு கண்ணதாசன் கூறியுள்ளார். ஆனால் படத்தின் இசையமைப்பாளராக எம்.எஸ்.வி பாடலை படித்துவிட்டு இது மக்களுக்க புரியாது என்ற சொல்லி நிராகரித்துள்ளார். ஆனாலும் கண்ணதாசன் அவரிடம் வலுக்கட்டாயமாக இந்த பாடலை சேர்க்க சொல்ல, அப்போது படத்தின் இயக்குனர் பந்துலு அங்கே வந்துள்ளார்.
பி.ஆர்,பந்துலு இந்த பாடலை பார்த்துவிட்டு பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் மக்களுக்கு புரியுமா என்று கேட்டுள்ளார். அதெல்லாம் புரியும் அதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் என்று சொல்ல, கண்ணதாசனின் நம்பிக்கையை பார்த்து பி.ஆர்,பந்துலு எம்.எஸ்.வி இருவரும் பிடிக்காமல் இந்த பாடலை சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொள்கின்றனர். அந்த பாடல் படத்தில் இடம் பெற்றதை தொடர்ந்து தியேட்டரில் அந்த பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த பாடல் தான் பலே பாண்டியா படத்தில் இடம்பெற்ற ‘அத்திக்காய் காய் காய்’ என்ற பாடல்.
இந்த பாடலில் காய்கறிகள் பற்றி கூறியுள்ளதாக மக்கள் நினைத்துவிட கூடாது என்பதால், பாடல் முழுவதும்,நிலவை பார்த்து பாடுவது போலவே காட்சிகள் அமைத்திருப்பார்கள். இந்த பாடல் முழுவதுமே நிலவுக்கு அறிவுரை சொல்வது போலத்தான் அமைந்திருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"