Advertisment
Presenting Partner
Desktop GIF

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... கலக்கிய பூவை செங்குட்டுவன் : கண்ணதாசன் பெருந்தன்மை!

1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் கந்தன் கருணை. சிவக்குமார் முருகன் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Kanthan Karunai Kannadasan

கந்தன் கருணை

கடவுள் முருகன் பாடல்கள் அத்தனையும் அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்றாலும், கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் என்ற பாடல் தனி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் உருவான விதம் எத்தனை பேருக்கு தெரியும்?

Advertisment

1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் கந்தன் கருணை. சிவக்குமார் முருகன் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தை கண்ணாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசன் தயாரித்திருந்தார்.

இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கணணதாசன் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அங்கு இறைவணக்க பாடல் ஒலிக்கிறது. சூரமங்கலம் சகோதரிகள் பாடிய அந்த பாடல் தான் ‘’திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’’ என்ற பாடல். இந்த பாடலை கேட்டவுடனே, கண்ணதாசன், ஏ.பி.நாகரஜன், தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் ஆகிய மூவருமே நெகிழ்ந்து போய் இருக்கின்றனர்.

இதை கேட்ட, ஏ.பி.நாகராஜன், இந்த மாதிரி நீங்கள் ஒரு பாடலை எழுதலாமே என்று சொல்ல, இது மாதிரி என்ன இந்த பாடலையே பயன்படுத்திக்கொள்ளலாமே என்று கண்ணதாசன் கூறியுள்ளார். மேலும நான் எழுதி இருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா என்று தெரியாது. அந்த அளவிற்கு பாடல் சிறப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார் கண்ணதாசன்.

இந்த பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன் என்று சொல்ல, அவருக்கு கண்ணதாசன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த பாடலை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சென்னையில கந்த கோட்டம் உண்டு என்ற வரிக்கு பதிலாக சிறப்புடனே கந்த கோட்டம் உண்டு என்று மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதன்படி இந்த வரிகள் மாற்றி பாடல், படத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த பாடலுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். அப்போது சினிமாவில் குன்னக்குடி பிரபலம் இல்லாத சமயம். முருகனின் பக்தி பாடல்கள் தொகுப்பை வெளியிட விரும்பிய கண்ணதாசன், அதை சூரமங்கலம் சகோதரிகளை வைத்து பாட வைக்கவும், இதற்கு பூவை செங்குட்டுவனை பாடல் எழுதவும் அழைதக்கிறார். ஆனால் பூவை செங்குட்டுவன் இந்த அழைப்பை நிராகரித்துள்ளார்.

அப்போது அவர் திராவிட சிந்தனையுடன் அறிஞர் அண்ணாவுடன் பயணித்துக் கொண்டிருந்ததால், இந்த வாய்ப்பை வேண்டாம் என்று தவிர்த்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டு பாடல் எழுதியுள்ளார். இந்த பாடல் முருக காணம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெறுகிறது. அதன்பிறகு இந்த பாடலை நாடகத்திற்கு கொடுக்கிறார்கள். இந்த ஒரு பாடலுக்காக பூவை செங்குட்டுவன் 3 சம்பளம் வாங்கியுள்ளார்.

அதேபோல் கண்ணதாசன் நினைத்திருந்தால், இதை விட சிறப்பாக ஒரு பாடலை எழுதி இருக்கலாம் என்றாலும், தான் பிரபலமாகிவிட்டோம் செங்குட்டுவன் மேலே வரட்டுமே என்று அவரின் பாடலை பயன்படுத்தியது கண்ணதாசனின் பெருந்தன்மையை காட்டுக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment