Advertisment

காதல், நட்பு, துரோகம், துக்கம்... கார்த்தி - அரவிந்த் சாமி காம்போ எப்படி? மெய்யழகன் விமர்சனம்!

கார்த்தி - அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள மெய்யழகன் படம் குறித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Karthi And Aravith

96 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே பெரிய வரவேற்பை பெற்ற இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள 2-வது படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள இந்த படத்தில், ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்த இசையைமத்துள்ள இந்த படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர்.

Advertisment

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை பூர்த்தி செய்யும் விதமாக சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாமல், படம் ரிலீஸ்க்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பலரும், படம் சிறப்பாக இருப்பதாக விமர்சனங்களை கொடுத்திருந்தனர்.

இதனிடையே மெய்யழகன் படம் இன்று (செப்டம்பர் 27) வெளியாகியுள்ளது. விமர்சகர்கள் சொன்னது போல் படம் நன்றாக இருக்கிறதா என்பது குறித்து படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

நம் குடும்பம், நினைவுகளை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கும் மெய்யழகன் கார்த்தி, அரவிந்த் சாமியின் அற்புதமான நடிப்புகள் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிடும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் கமல்ஹாசன் பாடிய ஒரு பாடலை பாராட்டியுள்ளார். 

படத்தின் முதல் காட்சியில் வரும் கல்யாண விருந்து காட்சி

பெரும்பாலான ரசிகர்கள் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக பாராட்டுக்களை குவிந்த்து வரும் நிலையில், சிலர் தமிழ் சினிமாவில் தவிர்க்க கூடாத படம் என்று கூறி வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Karthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment