கார்த்தியின் ‘கைதி’ எப்போது விடுதலை?

இரவு நேர படபிடிப்பாக, 62 இரவுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இரவு நேர படபிடிப்பாக, 62 இரவுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaithi movie in hindi

kaithi movie review release

'தேவ்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது ‘கைதி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Advertisment

’மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

கார்த்தி கேங்ஸ்டராக நடித்திருக்கும் இப்படம் இரவு நேர படபிடிப்பாக, 62 இரவுகளில் படமாக்கப்பட்டுள்ளது. கார்த்தியுடன் இணைந்து நரேன், தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹீரோயின் மற்றும் பாடல்கள் இல்லாத இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

சில வாரங்களுக்குன் முன்பு ‘கைதி’யின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியிருக்கிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில் இப்படத்தை ஜூலை 19-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம் தயாரிப்பு குழுவினர். காரணம் ஜோதிகா நடிப்பில் ட்ரீம் வாரியரின் தயாரிப்பான ‘ராட்சசி’ ஜூன் 28-ம் தேதி வெளியாகிறது. ஆகையால் இந்த இடைவெளி சரியாக இருக்கும் என்பது தான் அவர்களின் எண்ணம்.

 

Tamil Cinema Karthi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: