'நடிகைகளுடன் ஹாட் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கேன்' கவிஞர் வாலி அனுபவம்

தனது முதுமை வயதிலும் இளம் நடிகர்களுக்கான காதல் பாடல்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்த வாலி சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்

தனது முதுமை வயதிலும் இளம் நடிகர்களுக்கான காதல் பாடல்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்த வாலி சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Kavignar vaali3

5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி, ஒரு பேட்டியில் நான் நடிகைகளுடன் ஹாட் ட்ரிங்ஸ் சாப்பிட்டு இருக்கிறேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று போற்றப்படுபவர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விக்ரம் சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இன்றைய நடிகர்களுக்கும் தனது எழுத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்தபோது எம்.ஜி.ஆரின் அஸ்தான பாடல் ஆசிரியராக மாறியவர்.

அதே போல் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினி கமல் காலம் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை சுமார் 5 தலைமுறைகளுக்கு மேலாக பாடல்கள் எழுதியுள்ள வாலி, தன் வாழ்நாளில் இறுதிவரை திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார். அதேபோல் தனது முதுமை வயதிலும் இளம் நடிகர்களுக்கான காதல் பாடல்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்த வாலி சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்

அதேபோல் எந்த கேள்வியாக இருந்தாலும், வெளிப்படையாக பதில் சொல்லி, கேள்வி கேட்டவரையே மிரள வைக்கும் திறமை கொண்ட வாலி, தனது வாழ்நாளின் கடைசி காலக்கட்டத்தில் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது ஒரு பேட்டியில், நடிகைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்வி குறித்தும் அதற்கு தான் கொடுத்த பதில் குறித்து வாலி பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

இந்த வீடியோ பதிவில், நீங்கள் சினிமாவில் இவ்வளவு பாடல்கள் எழுதி இருக்கிறீர்களே உங்களுக்கு நடிகைள் எல்லாம் பழக்கம் உண்டா என்று மதன் என்னை கேட்டார். நான் நிறை நடிகையுடன் ஹாட் ட்ரிங்ஸ் சாப்பிட்டிருக்கிறேன் என்று சொன்னேன். இதை விட எப்படி ஓப்பனாக சொல்வது. ஹாட் ட்ரிங்ஸ் சாப்பிட்டு இருக்கேன் என்று தான் சொன்னேன். இப்போது சாப்பிடுகிறேன் என்று சொல்லவில்லை. நான் சாப்பிட்ட நடிகைகள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டார்கள். அதனால் இப்போ இருக்க நடிகைகள் என்று நினைத்துவிட போகிறார்கள் என்று வேடிக்கையாக பதில் அளித்துள்ளார் வாலி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

kavignar vaali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: