தமிழ் சினிமாவில் கடைசி வரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட கவிஞர் வாலி, உதடுகள் ஒட்டாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி உட்பட 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்தவர் கவிஞர் வாலி. தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட அவர், தற்போதைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் தொடங்கிய இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள வாலி, சிவாஜி தொடங்கி இன்றைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இப்படி பல பெருமைகளை கொண்ட வாலி, உதடுகள் ஒட்டாத வார்த்தைகளை வைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில், இயக்குனர் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம வில்லு பாட்டுக்காரன். 1992-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ராமராஜன், ராணி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு இளையரைாஜா இசையமைத்திருந்தார். வாலி, கங்கை அமரன், ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்த படத்தில் வாலி 2 பாடல்கள் எழுதியிருந்தார். இதில் தந்தேன் தந்தேன் என்ற பாடலை உதவுகள் ஒட்டாத வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியிருப்பார் வாலி. இந்த பாடலில் கலைவாணர் என்ற வார்த்தை இருந்தாலும் அரை உதடு ஒட்டும். இது பரவாயில்லை என்று இளையராஜா கூறியிருந்தாலும், முடியாது என்று அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் என்று மாற்றி உதடுகள் ஒட்டாத வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பார்.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் ரசிகர்கள் மத்தியல் பெரிய வெற்றிப்படமாக மாறியது. பாடல்கள் இன்றும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடததக்கது. இந்த பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“