இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள பிளாடி பெக்கர் திரைப்படம் தீபாவளி நாளான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டிலேயே கோவை பிராட்வே சினிமாவில் தான் காலை 7 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை படக்குழுவினர்களான நடிகர்கள் கவின், ரெடின் கிங்ஸ்லி, இயக்குனர் சிவபாலன் ஆகியோர் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.
படம் முடிந்து வெளியில் வந்த அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பட குழுவினர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த படம் கமர்சியல் படம் தனிப்பட்ட ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். நடிகர் கவினிடம் அடுத்த படம் குறித்தான கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடித்து கொண்டிருப்பதாக தெரிவித்து புறப்பட்டார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“