scorecardresearch

இளைஞர்கள் கொண்டாடிய படம்… ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் கவினின் தாதா

விக்ரம் பிரபு நாயகான நடித்த சத்ரியன் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்த கவின், அதன்பிறகு நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இளைஞர்கள் கொண்டாடிய படம்… ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் கவினின் தாதா

பிக்பாஸ் கவின் நாயகனாக நடித்து வெளியான தாதா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கவின் அதன்பிறகு சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். அந்த வகையில் இவர் நடித்த பீட்சா, இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

விக்ரம் பிரபு நாயகான நடித்த சத்ரியன் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்த கவின், அதன்பிறகு நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் நாயகனாக நடித்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், கவின் அடுத்த நடித்த லிப்ட் படம் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சமீபத்தில் கவின் நடிப்பில் தாதா படம் வெளியானது.

கடந்த பிப்ரவரி 10-ந் தேதி வெளியான இந்த படத்தை கனேஷ் கே பாபு இயக்கி இருந்தார். கவினுடன் அபர்னா தாஸ் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விமர்சனரீதியாகவும் நல்ல பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தாதா படம் தற்போது மார்ச் 10-ந் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அமேசான் ப்ரைம் வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்செயலாக டீன் ஏஜ் பெற்றோராக மாறிய மணிகண்டன் (கவின்) மற்றும் சிந்து (அபர்ணா தாஸ்) என்ற இளம் ஜோடியின் நிபந்தனையற்ற காதல் மற்றும் மோதலின் அழகான கதை.

இதற்கு முன்பு வெளியான படங்களை போல் இல்லாமல், புதிய காட்சிகளுடன் படமாக்கப்பட்ட தாதா படம் ரசிகர்கர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது என்று சொல்லலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema kavin dada movie release amazon prime on march 10th

Best of Express