scorecardresearch

பொறுப்பற்ற கணவன்… பொறுப்பான அப்பா… நடிப்பில் முத்திரை பதித்தாரா கவின்? டாடா விமர்சனம்

பிக் பாஸ்க்கு பிறகு கவினுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் நடித்த முதல் படமான “லிப்ட்” ஓடிடியில் வெளியானது.

பொறுப்பற்ற கணவன்… பொறுப்பான அப்பா… நடிப்பில் முத்திரை பதித்தாரா கவின்? டாடா விமர்சனம்

பிக் பாஸ்க்கு பிறகு கவினுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவர் நடித்த முதல் படமான “லிப்ட்”  ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் இவர் நடிப்பில் முதன் முதலாக திரையரங்கில் வெளியாகும் படமான “டாடா”ரசிகர்களை ஈர்த்துள்ளதா? என்பதை விமர்சனத்தில் காணலாம்.

கதை:

ஜாலியாக சுற்றித்திரியும் கல்லூரி மாணவன் மணிகண்டனாக நாயகன் கவின் நடித்துள்ளார்.அவரை காதலிக்கும் நாயகியாக அபர்ணா தாஸ்(சிந்து) நடித்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அபர்ணாதாஸ் கர்ப்பமாகிறார். மேலும் இரு வீட்டின் பெற்றோர்களும் இவர்களை சேர்க்காததால்,தனியாக வீடு எடுத்து தங்கும் நிலை ஏற்படுகிறது.கவினின் பொறுப்பற்றத்தனத்தால் கோபம் கொண்டு தான் பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு பெற்றோருடன் செல்கிறார் அபர்ணா. அதன்பிறகு அந்த குழந்தையை கவின் தனியாளாக எப்படி வளர்த்தெடுக்கிறார்? என்பது தான் கதை.

நாயகன் கவின்:

இதற்கு முன்பு இவர் நடித்த “லிப்ட் “படம் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்றாலும் ஓ.டி.டி’யில் இவரது நடிப்பை பலரும் பாராட்யிருந்தனர். இப்படத்தில் பொறுப்பில்லாமல் சுற்றும் கல்லூரி மாணவனாகவும், நாயகியுடன் தனி வீட்டில் இருக்கும் பொழுது பொறுப்புள்ள கணவனாகவும்

பின்பு,குழந்தையை வளர்த்தெடுக்கும் போது பொறுப்புள்ள தந்தையாகவும் பல்வேறு பரிணாமங்களில் தன்னுடைய முழுமையான, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடி காட்சிகளில் சிரிக்கவும், எமோஷனல் காட்சிகளில் கலங்கவும் வைக்கிறது இவருடைய நடிப்பு. ஓரளவிற்கு நடனமும் ஆடுகிறார். மொத்தத்தில் ஒரு சிறந்த நடிகராக வருவதற்கான அனைத்து  தகுதியும் உள்ளவராக அவரை காட்டுகிறது இந்த நடிப்பு. ஒரு சில நடிகர்களின் படம் வெற்றி அடையும் போது,நாமே வெற்றடைந்தது போல ஒரு சந்தோஷம் இருக்கும் அதுபோலவே இப்படத்தையும், இவருடைய நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

அபர்ணா தாஸ்:

“பீஸ்ட்” படத்தில் நடித்ததன் மூலம் ஓரளவுக்கு பிரபலமாக இருந்த அபர்ணதாஸ், இப்படத்தில் தன்னுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் நாயகியாக உருவெடுத்திருக்கிறார். கவின் மீது இருக்கும் காதலையும், அதேசமயம் கவின் இவ்வாறு பொறுப்பற்ற மனிதனாக இருப்பதால் கோபமும் என இருவேறு நடிப்பினை ஒரே காட்சியில் அவர் வெளிப்படுத்தியிருப்பது ஒரு தேர்ந்த நாயகியாக அவரைக் காட்டுகிறது. கிளைமேக்ஸ் காட்சியில் தான் செய்த தவறை நினைத்து அழுகும் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறார்.

துணை நடிகர்கள்

கவினின் அப்பாவாக வரும் பாக்கியராஜ், கவினுக்கு உதவி செய்பவராக வரும் விடிவி கணேஷ் இருவரும் தங்களுடைய பங்களிப்பினை சிறப்பாக செய்துள்ளனர். கவினுடைய நண்பர்களாக வரும் நடிகர்கள் செய்யும் காமெடிகள் மிகப்பெரியளவில் கனெக்ட் ஆகியிருப்பது படத்தை ரசிக்க உதவுகிறது.

இயக்குனர் கணேஷ்.கே. பாபு:

ஒரு சுலபமான கதையை வைத்துக்கொண்டு அதன் திரைக்கதையை எவ்வளவு உண்மையாகவும்,எதார்தமாகவும் எழுத முடியுமோ அதை எழுதி காமெடி,காதல், எமோஷன் என இன்றைய  தலைமுறையை கவரும் அனைத்தையும் ஒரு சேர கலந்து ஒரு சிறந்த படத்தை மக்களுக்கு கொடுத்துள்ளார்.

இசை மற்றும் ஒளிப்பதிவு:

“ஜென்மார்டின் “என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மென்மையாக படத்தின் திரைக்கதையோடு கலந்திருப்பதால் பெருமளவு ஈர்ப்பை பெறுகிறது.மேலும் இவருடைய அழகான பின்னணி இசை படத்தை மேலும் அழகாக்குகிறது. அனைத்து காட்சிகளுமே அழகாகவும் எதார்த்தமாகவும் நம்மோடு கனெக்ட் செய்ய வைக்கிறது எழிலரசுவின் ஒளிப்பதிவு.

பாசிடிவ்ஸ்:

இன்றைய தலைமுறையினருக்கான கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருப்பது சிறப்பு.

காமெடி காட்சிகள் பல இடங்களில்  ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

*நடிகர்களின் எதார்த்த நடிப்பால் படத்தோடு ஒன்றிணைய முடிகிறது

சமூக கருத்தோடு இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் அதை ஒரு சில வசனங்களின் மூலம் திகட்டாமல் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.

நெகட்டிவ்ஸ்:

படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியான நெகட்டிவ்ஸ் எதுவும் இல்லை என்றாலும் ஒரு சில எமோஷனல் காட்சிகள் சற்று தூக்கலாக இருப்பது உறுத்தல்.

மொத்தத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்த்து, ஒரு சில கருத்துக்களை புன்னகையுடன் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஒரு நல்ல படத்தை  இந்த இளைஞர்கள் கூட்டணி கொடுத்துள்ளது.

Verdict – Feel Good flim

Marks  – 4/5

நவீன் குமார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema kavin dada movie review update in tamil