/indian-express-tamil/media/media_files/2025/08/13/kizhakku-chemmiyile-aswini1-2025-08-13-00-21-14.jpg)
தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படங்களை பட்டியலிட்டால், முன்னணியில் இருப்பது பாசமலர் படம் தான். இந்த படத்திற்கு அடுத்து ஒரு படம் எடுத்தால் அது நிச்சயமாக கிழக்கு சீமையிலே திரைப்படம் தான். இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் நாயகியாக நடித்த பேச்சி கேரக்டர் மறக்க முடியாது. இந்த கேரக்டரில் நடித்த நடிகை அஸ்வினி இப்போது எப்படி இருக்கார் தெரியுமா?
கடந்த 1993-ம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் கிழக்கு சீமையிலே. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், விஜயகுமார், ராதிகா, நெப்போலியன், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். அதேபோல் நடிகர் விக்னேஷ் விஜயகுமாரின் மகனாகவும், அஸ்வினி, ராதிகாவின் மகளாகவும் நடித்திருந்தனர். வடிவேலு, விஜி சந்திரசேகர், சூர்யகாந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கிராமத்து பின்னணியில் இசையமைத்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றுவரை பேசப்படும் பாடல்களாக நிலைத்திருக்கிறது. மானுத்து மந்தையிலே பாடல் இன்றும் திருமண வீடுகளில் ஒளிக்கும் முக்கிய பாடலாக நிலைத்திருக்கிறது. தனது தங்கைக்காக எதையும் செய்ய துணிந்த அண்ணனின் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் விக்னேஷ் நடித்த சீனு கேரக்டருக்கு, அஸ்வினி நடித்த பேச்சி கேரக்டர் தான் ஜோடி. இவர்கள் இருவருக்கும் இடையேயனா காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்துது. குறிப்பாக, இவர்கள் இருவரும் ஆடும் ஆந்தங்கரை மரமே பாடல், காதலர்களின் ரிங்டோனாக இருந்து வருகிறது. இதில் பேச்சி கேரக்டரில் நடித்த நடிகை ஆர்.வி. அஸ்வினி, பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமமானார். இந்த படத்தின் மூலம் தான் நெப்போலியனும் சினிமாவுக்கு வந்தார்.
கிழக்கு சீமையிலே படத்தில், நெப்போலியனின் மகள் தான் ஆர்,வி.அஸ்வினி, இந்த படத்திற்கு பிறகு, புதுப்பட்டி பொண்ணுத்தாயி, பெரிய தம்பி, விஜயகாந்தின் கள்ளழகர், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஓரம்போ என்ற படத்தில் நடித்த இவர், சமீபத்தில் வெளியான சுழல் வெப் தொடரில் நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார், இவர் இப்போது இருக்கும் ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் பலரும் கிழக்கு சீமையிலே பேச்சியா இவர் என்று கேட்டு வருகின்றனர்.
இதனிடையே தன்னுடன் இணைந்து நடித்த விக்னேஷை சமீபத்திய ஒரு பேட்டியில்,நிகழ்ச்சி ஒன்றில், பார்த்ததாகவும், முதலில் அவரிடம் பேச தயங்கியதாகவும் கூறியுள்ள அவர். தனது கணவர் சொன்னதால், அவரிடம் பேசினேன். கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவருடன், பழைய நனைவுகளை பகிர்ந்துகொண்டதாகவும், அஸ்வினி கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.