scorecardresearch

ஹீரோவான தனுஷ் பட வில்லன்.. டிரெண்டிங்கில் சான் ரோல்டன் பாடல்.. மேலும் சினிமா செய்திகள்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வெளியான போதிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. அலியா பட்டின் நடிப்பும் அனைத்து தரப்பினராலும் பாராட்டை பெற்று வருகிறது.

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அமிதாஷ் பிரதான் தற்போது இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை காஷ்மிரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர் சரத்குமார், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘பரம்பொருள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பரம்பொருள் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷுடன் நடிக்கும் செல்வராகவன்

நடிகர் தனுஷை காதல் கொண்டேன் படத்தில் நடிக்க வைத்து நல்ல நடிகரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரது சகோதரரும் இயக்குநருமான செல்வராகவன்.

அவர் தற்போது தனுஷுடன் இணைந்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுடன் அவரும் இணைந்து நடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இயக்குநர் செல்வராகவனுக்கு மார்ச் 5-ஆம் தேதி பிறந்த நாள். இதையொட்டி, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது. அந்தப் போஸ்டரில் நடிகர் தனுஷும், இயக்குநர் செல்வராகவும் இருப்பது போன்று உள்ளது.

இதை பகிர்ந்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் செல்வராகவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, நடிகர் கிருஷ்ணா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

டிரெண்டிங்கில் சான் ரோல்டன் பாடல்

பறை என்ற ஆல்பம் பாடல் யூ-டியூப் டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் பாடல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறது.

பறை இசைப்பவர் உயிரிழந்துவிட அவரது உடலை ஊருக்குள்ளே எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அவரது மகள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. பாடலும் காட்சி அமைப்பும் சிறப்பாக உள்ளது.

சான் ரோல்டன் அருமையாக இசை அமைத்துள்ளார். கே.லோகனும், சால் ரோல்டனும் இணைந்து பாடலை எழுதியிருக்கின்றனர். குமரன் எழுதி இயக்கியுள்ளார். சாதி அடக்குமுறைக்கு எதிராக உருவாகியுள்ள இந்த ஆல்பம் யூ-டியூப் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

ஸ்ரீதேவியின் மகளுக்கு பிறந்த நாள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு இன்று 25ஆவது பிறந்த நாள். இதையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவரது சகோதரர் அர்ஜுன் கபூரும் ஜானிவிக்கு வாழ்த்து கூறினார். அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அர்ஜுன் கபூர் வாழ்த்து கூறினார். வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் தான் ஜான்வி கபூரின் தந்தை.

ஜான்வி கபூர் நடிப்பில் கஞ்சன் சக்ஸேனா படம் நெட்பிளிக்ஸ் தளத்தல் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

போட்டியை சமாளித்து வரும் அலியா பட் படம்

அலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கங்குபாய் கதியாவாடி. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார். அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வெளியான போதிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. அலியா பட்டின் நடிப்பும் அனைத்து தரப்பினராலும் பாராட்டை பெற்று வருகிறது.

வலிமை படம் வெளியானதால் கங்குபாய் வசூல் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கங்குபாய் படத்தை பார்ப்பதற்கு என்று தனி கூட்டம் வந்தது. தற்போது, அமிதாப் பச்சன் நடிப்பில் கால்பந்தை மையப்படுத்தி ஜுந்த் என்ற படம் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:பாண்டி பஜார் பிளாட்ஃபார்மில் இரவு வாழ்க்கை… எஸ்.ஏ.சி வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் ரியாக்ஷன்

ஹாலிவுட் படமான த பேட்மேனும் வெளியாகி வசூல் செய்து வருகிறது. இருப்பினும், கங்குபாய் படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருவதால் கங்குபாய் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema kollywood bollywood cinema round up421099