/indian-express-tamil/media/media_files/2025/09/06/gandhi-kannadai-movie-update-2025-09-06-08-30-54.jpg)
கே.பி.ஒய். பாலா நாயகனாக நடித்துள்ள காந்தி கண்ணாடி படம் ரிலீஸ்க்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று வெளியான இந்த படத்தின் பேனர்களை கிழித்து அடாவடி செய்வதாக படத்தின் இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திரை நட்சத்தரங்கள் பலரும் பாலாவின் செயலுக்கு உதவி வருகின்றனர்.
இதனிடையே கே.பி.ஒய் பாலா, காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். 2018-ம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், புலிக்குத்தி பாண்டி, லாபம், நாய் சேகர், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான, சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடத்தில் நடித்திருந்த பாலா, காந்தி கண்ணாடி படத்தில் நாயகனாக நடித்துள்ளர்.
படத்தின் ரிலீஸ்க்கு முன்பே விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சினிமா நண்பர்களுக்காக இந்த படம் திரையிடப்பட்டது. பார்த்த அனைவருமே இந்த படத்திற்கு பாசிட்டீவான விமர்சனங்களை கூறியிருந்த நிலையில், காந்தி கண்ணாடி படம் நேற்று (செப்டம்பர் 5) வெளியானது. இந்த படத்துடன் சேர்ந்து பேட் கேர்ள், காதி மற்றும் சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய படங்கள் வெளியானது. இதில் மதராஸி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
அதே சமயம் காந்தி கண்ணாடி ரிலீஸ்க்கு முன்பே பாசிட்டீவான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், படம் வெளியான நாளில், தியேட்ரில் பேனர் வைக்க விடவில்லை. என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இப்போது ஷோ இல்லை என்று எனக்கு போனில் சொல்கிறார்கள். ஏன்? எதற்காக என்று கேட்டால், தெரியவில்லை. தியேட்ரில் பேனர் வைக்க விடமாட்டேன்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை.
நான் சைக்கிளில் போஸ்டர் கட்டிக்கொண்டு 50 பைசா, ஒரு ரூபாய்ப்பு போஸ்டர் ஒட்டிய பையன், அதேபோல் காரைக்காலில் இருந்து சினிமா ஆசைக்காக ஓடி வந்த பையன் பாலா. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணிருக்கோம். எனக்கு தெரியவில்லை. ஏன் அடிக்கிறார்கள், எதற்காக அடிக்கிறார்கள் என்று எனக்கு புரியவே இல்லை. எது எதுக்கோ செலவு செய்கிறார்கள். அந்த காசை தயவு செய்து நல்லது பண்றதுக்காக செலவு செய்யுங்கள். என்னை அடிக்க வேண்டும் என்றால் நேரடியாக அடியுங்கள்.
Cheap behaviour from SK PR team. Why are you doing this da @Siva_Kartikeyan? Due to #GandhiKannadi positive reports, SK PR team is not giving theatres, blocking the release, and removing banners for GandhiMahaan.#Madharaasi#MadharaasiDisasterpic.twitter.com/SPiJ3dFB4E
— ÉAGLÉ (@EuphoricEagle19) September 5, 2025
படத்திற்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் அதற்காக ரொம்ப நன்றி என்று கூறிய படத்தின் இயக்குனர், அருகில் இருக்கும் நடிகர் ராகவா லாரண்ஸ்க்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.பி.ஒய். பாலா சிவா அண்ணா பெரிய நடிகர் நாங்கள் சிறிய படம் பண்ணிருக்கோம். அந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவங்க இந்த படத்திற்கு வாங்க என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.