கே.பி.ஒய் பாலா ஹீரோவா? எனக்கு கால்ஷீட் இல்ல: விலகிய 50 ஹீரோயின்கள்: 'காந்தி கண்ணாடி' இயக்குனர் வருத்தம்!

சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடத்தில் நடித்திருந்த பாலா, நாயகனாக நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. நமிதா கிருஷ்ணமூர்ததி நாயகியாக நடித்துள்ளார்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடத்தில் நடித்திருந்த பாலா, நாயகனாக நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. நமிதா கிருஷ்ணமூர்ததி நாயகியாக நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
KPY Bala Movie

சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கே.பி.ஒய். பாலா, தற்போது சினிமாவில் நாயகனாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த படம் உருவான விதம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

Advertisment

சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாலாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரை நட்சத்தரங்கள் பலரும் பாலாவின் செயலுக்கு உதவி வருகின்றனர்.

இதனிடையே கே.பி.ஒய் பாலா, காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். 2018-ம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், புலிக்குத்தி பாண்டி, லாபம், நாய் சேகர், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான, சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடத்தில் நடித்திருந்த பாலா, நாயகனாக நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. நமிதா கிருஷ்ணமூர்ததி நாயகியாக நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து படத்தின் இயக்குனர், மற்றும் பாலா ஆகியோர் சினியுலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளனர். இதில் இந்த படம் முதலில் முடிவானபோது லாரண்ஸ் என்னை அழைத்து வாழ்த்தினார், எனது பிறந்த நாள் போஸ்டரை பார்த்துவிட்டு விஜய் சேதுபதி என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டு அட்வைஸ் வழங்கினார். நான் அறிமுகம் ஆனதே அவருடைய படத்தில் தான். எப்போதம் என்னை ஊக்குவிக்கும் நபர்களில் முக்கியமானவர் என்று பாலா கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய இயக்குனர் ஷெரிப், இந்த படம் ஆரம்பிக்கும்போது 50 கிலோவில் இரந்த பாலா, 4 மாதங்களில் ஷூட்டிங் தொடங்கும்போது 75 கிலோவாக எடை கூடினார். அவரை நன்றாக பார்த்துக்கொள்ள அவரது நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை பல ஹீரோயின்கள் கேட்டுவிட்டார்கள். கதையை கேட்டுவிட்டு சூப்பர் பண்ணலாம் என்று சொன்னவர்கள் பாலா ஹீரோ என்றதும், விலகிவிட்டார்கள். பாலா ஹீரோவா? எனக்கு டேட்ஸ் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

ஒருசிலர், எனக்கு டைம் வேணும் என்று சொல்வார்கள். ஒருசிலர் போனையே எடுக்கமாட்டார்கள். படப்பிடிப்பு தாமதம் ஆனதற்கு இதுவும் ஒரு காரணம். இப்படியே 50 பேர் விலகிவிட்டார்கள். இந்த ஹீரோயின் 51-வது ஆள். ஒரே நாளில் 12 ஹீரோயின்களுக்கும் கதை சொல்லி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Cinema News tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: