கமர்ஷியல் ஹீரோவான சிவகார்த்திகேயன், தனது கமர்ஷியல் ஸ்டார் அந்தஸ்தில் இருந்து விலகி தன்னுடைய எஸ்.கே புரொடக்க்ஷன் மூலம் கனா என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது குரங்கு பெட்ல் என்ற படத்தை வெளியிட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர், எழுத்தாளர், கவிஞர், இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்ட ராசி அழகப்பனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை, வண்ணத்துப்பூச்சி என்கிற படத்தை குழந்தைகளை மையமாக வைத்து இயக்கிய கமலக்கணணன் என்பவர் இயக்கியுள்ளார். வண்ணத்துப்பூச்சி படம், அற்புதமான படைப்பாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிதாக போகவில்லை.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் படைப்புகள் வணிக ரீதியாக பேசப்படவில்லை என்றாலும் காலம் கடந்து நிற்கும் காவியமாக இருந்து வருகிறது. அதேபோல் ராசி அழகப்பனின் எழுத்துக்களும் படைப்புகளும் "குன்றின் மேலிட்ட விளக்காக" நிரூபித்திருக்கின்றது என்பதை விளக்கும் படம் தான் குரங்கு பெடல். சமீபத்தில் வந்த மஞ்சுமல் பாய்ஸ் படம் 30 வருடத்துக்கு முன்பு வந்த குணா படத்தின் தரத்தை உலகிற்கு சொன்னது.
அதேபோல் 90களில் வந்த ராசி அழகப்பனின் சிறுகதை காலம் கடந்து இன்று படமாக மாறி நிற்கின்றது. சைக்கிள் ஓட்ட தெரியாத தந்தையின் குறையை தீர்க்க மகன் எடுக்கும் முயற்சி தான் குரங்கு பெடல் படத்தின் மையக்கரு. இந்த படம் 90களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளார் என்றே சொல்லலாம். காளி வெங்கட் போன்ற இயல்பான கலைஞர்கள் காலம் கடந்தும் கொண்டாடப்படவேண்டியவர்கள்.
இதுபோன்ற படைப்புகள் தான் தமிழ் சினிமாவின் தரத்தை உலகிற்கு உணர்த்தும் இந்த படத்தின் வெற்றி தான் தமிழ் சினிமாவின் உண்மையான படைப்பாளிகளின் வெற்றி என்கிற சிந்தனை வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டும் இப்படி ஒரு இயல்பான படைப்பை அதுவும் கோடைவிடுமுறையில் குழந்தைகளுக்காக கொடுத்திருக்கும் இயக்குனர் கமலக்கண்ணன் மற்றும் படத்தை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
திராவிட ஜீவா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“