முதல் பாகத்தை முந்தியதா எம்புரான்? லூசிஃபர் 2 படம் எப்படி? ட்விட்டர் விமர்சனம்!

6 வருடங்களுக்கு பிறகு லூசிஃ.பர் படத்தின் 2-ம் பாகமாக எல்.2 எம்புரான் என்ற பெயரில் தயாராகியுள்ளது. பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், மோகன்லாலுடன் முதல் பாகத்தில் நடித்த டவினோ தாமஜ், மஞ்சுவாரியார் ஆகியோர் நடித்துள்ளனர்.

6 வருடங்களுக்கு பிறகு லூசிஃ.பர் படத்தின் 2-ம் பாகமாக எல்.2 எம்புரான் என்ற பெயரில் தயாராகியுள்ளது. பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், மோகன்லாலுடன் முதல் பாகத்தில் நடித்த டவினோ தாமஜ், மஞ்சுவாரியார் ஆகியோர் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Lucifer 2 Empuran Movie

கடந்த 2019-ம் ஆண்டு மோகன்லால், நடிப்பில் வெளியான படம் லூசிஃபர். மஞ்சுவாரியார், விவேக் ஓபராய், டவினோ தாமஸ், கலாபவன் சாஜன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு முரளி கோபி கதை எழுதியிருந்தார். பிரபல நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் மாறியது.

Advertisment

தற்போது 6 வருடங்களுக்கு பிறகு லூசிஃ.பர் படத்தின் 2-ம் பாகமாக எல்.2 எம்புரான் என்ற பெயரில் தயாராகியுள்ளது. பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், மோகன்லாலுடன் முதல் பாகத்தில் நடித்த டவினோ தாமஜ், மஞ்சுவாரியார், ஆகியோருடன், சுராஜ் வெர்ஜினிமூடு, அபிமன்யூ சிங், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த தீபக் தேவ் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன், லைகா மற்றும் கோகுலம் சினிமாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எல்.2 எம்புரான் திரைப்படம் இன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம், குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisment
Advertisements

இது குறித்து ஸ்மார்ட் பரணி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், நன்றாக எழுதப்பட்ட கதை மற்றும் திரைக்கதை, அற்புதமான ஒளிப்பதிவு, மனதைத் தொடும் அதிரடி காட்சிகள், முதல் 30 நிமிடங்களில் சில வன்முறை காட்சிகளைப் பார்ப்பது கடினமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிக்க சமமான முக்கியத்துவம் பெற்றிருந்தன, சிறப்பாக நடித்திருந்தனர். சில சிறிய குறைபாடுகள் இருந்தாலும், திரைக்கதை அதை மறக்கடிக்கிறது. மொக்கோபாட் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது.. பெரும்பாலான காட்சிகளில் மேடை நன்றாக இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம் என்று பதிவிட்டுள்ளார். 

அதேபோல் மல்லுவுட் பாக்ஸ் ஆபீஸ் தனது எக்ஸ் பக்கத்தில், எதிர்பார்ப்புகள் மற்றும் மிகப்பெரிய முன் விற்பனையுடன் எல்.2 எம்புரான்  தயாரிப்பாளர்கள் திருப்திப்படுத்தத் தவறியது ஒரு பெரிய ஏமாற்றம். முரளி கோபி முழு கம்பீரமான லூசிஃபரை ஒரு டெம்ப்ளேட் பழிவாங்கும் நாடகமாக மாற்றியது ஜீரணிக்க முடியவில்லை. முந்தைய படத்துடன் ஒப்பிடும்போது இசைத் துறையும் மோசமாக இருந்தது. ஒரு திடமான லாலேட்டன் & 2 நல்ல எபிசோடுகள் இருந்தபோதிலும், இது ஒரு கலவையான சராசரி படமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

நந்தன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், எம்புரான் காட்டு சண்டைக் காட்சியின் போது நான் அழ ஆரம்பித்துவிட்டேன். என் கருத்து என்னவென்றால், படம் எவ்வளவு நல்லது அல்லது கெட்டது என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிய விரும்பினால், ட்விட்டரைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். YT க்குச் சென்று படத்தின் பொது எதிர்வினைகளைத் தேடிப் பார்த்துவிட்டு, பின்னர் பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

ஸ்னிஷ் என்பவர், லூசிஃபர் படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், ஒரு தொடர்ச்சியை எப்படி எழுதினார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை . என் பார்வையில், இது ஒரு அற்புதமான காட்சி விருந்தை வழங்கும் ஒரு பரவாயில்லை என்ற ரகம் தான்.  ஆனால் படத்தின் கதைசொல்லலில் ஆழம் இல்லை என்று பதிவிட்டுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: