டிஜிட்டல் மயமான சினிமா; தமிழ் சினிமாவின் கடைசி ''பிளாக் அண்ட் ஒயிட்'' படம் எது தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா அழிந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம் தமிழில் கடைசியாக வெளியான பிளாக் அண்ட் வொயிட் படம் எந்த திரைப்படம் தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா அழிந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம் தமிழில் கடைசியாக வெளியான பிளாக் அண்ட் வொயிட் படம் எந்த திரைப்படம் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Tamil Cinema Last Black And White Cinema

நாடகங்களில் இருந்து சினிமா தோன்றிய காலக்கட்டத்தில், சினிமா பிளாக் அண்ட் வொயிட் சினிமாவாக இருந்தது. அதன்பிறகு, ஒரு கட்டத்தில், சில படங்கள் கலர் படங்களாக வந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா அழிந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம் தமிழில் கடைசியாக வெளியான பிளாக் அண்ட் ஒயிட் படம் எந்த திரைப்படம் தெரியுமா?

Advertisment

இன்றைய காலக்கட்டத்தில், சினிமா டிஜிட்டல் மாயமாகிவிட்டதால் நடிகர்ளே இல்லாமல் கூட அவரை வைத்து படம் எடுக்கும் நிலை வந்துவிட்டது. இறந்த நடிகர்கள், பாடகர்கள் என பலரையும் ஏ.ஐ.டெக்னாலஜி மூலம் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல் முன்பு பாடல்கள், கேட்டு ரசிக்கும் வகையில் இருக்கும். ஆனால் இப்போது என்ன வார்த்தை என்று தெரிந்துகொள்ளவே கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது.

Santhiyaragam

பாடலை விடவும் பின்னணி இசை தான் காதை கிழிக்கிறது என்று பலரும் சமூகவலைதளங்களில் தங்கள் குமுறலை வெளியிடுவது அதிகரித்து வருகிறது. இன்றைய சினிமாவை பார்க்கும் பலருக்கும் அன்றைய சினிமாவின் உன்னதமான நிலையை நினைத்து பார்க்கிறார்கள். குறிப்பாக, 50 வயதை கடந்தவர்கள், இன்றும் பிளாக் அண்ட் ஒயிட் திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்றால், அந்த சினிமாவுக்கு இன்னும் அவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா டிஜிட்டல் உலகளில் கண்களை கவரும் அதிகப்படியான கலரில் வந்தாலும், பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவுக்கு என்று தனியாக ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், தமிழில் வெளியான கடைசி பிளாக் அண்ட் ஒயிட்சினிமா எந்த படம் என்பது தெரியுமா? தமிழ் சினிமாவில், நடிகர் இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான சந்தியா ராகம் என்ற படம் தான் தமிழில் வெளியான கடைசி பிளாக் அண்ட் ஒயிட் சினிமா.

Advertisment
Advertisements

சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா, ஓவியர் சந்தானம், ராஜலட்சமி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எல்.வைத்தியநாதன் என்பவர் இசையமைத்திருந்தார். படத்தை தயாரித்து இயக்கி ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பு பணிகளையும் கவித்தவர் தான் பாலுமகேந்திரா. 1990-ம் ஆண்டு குடும்ப நலனில் சிறந்த படம் என்ற வகையில் இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. மாறாக தூர்தஷனில் வெளியானது. 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: