லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்சின் (எல்.சி.யூ) 3-வது படம் தயாராக உள்ள நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் எல்.சி.யூ படங்களின் 3-வது இசையமைப்பாளர் அறிமுகமாகியுள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமகமானவர் லோகேஷ் கனகராஜ். மல்டி கதையம்சம் கொண்ட இந்த படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறிய இவர், அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருந்தார்.
தொடர்ந்து தனது 4-வது படமாக, கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. 80-களில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படத்தில், கைதி படத்தின் காட்சிகளை வைத்து தனக்கென தனி சினிமாட்டி யூனிவர்சை உருவாக்கினார். ஹாலிவுட் சினிமாவில் மட்டுமே இருந்து வந்த யுனிவர்ஸ் கலாச்சாரம், தமிழ் சினிமாவிலும் தற்போது உருவாக்கியுள்ளது.
அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய லியோ படத்திலும் எல்.சி.யூ கான்சப்டை வைத்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார், ஆனால் இந்த படம் எல்.சி.யூவில் வராது தனிப்படமாக இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதேசயம், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள பென்ஸ் படம் எல்.சி.யூ வரிசையில், 4-வது படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ள நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளராக சாய் அபியங்கர் கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் எல்.சி.யூ படங்களின் 3-வது இசையமைப்பாளராக மாறியுள்ளார். கைதி படத்திற்கு சாம். சி.எஸ் விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பென்ஸ் படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளதால், எல்.சி.யூ படங்களின் 3-வது இசையமைப்பாரளாக மாறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“