அந்தக் கால அஜித்… கவுண்டமணி அக்கா சுவாரசிய பேட்டி

Tamil Cinema Update : பல படங்களில் முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து காமெடியில் கலக்கிய கவுணடமணி அந்த கால அஜித் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Tamil Cinema Actor Goundamani Lifestyle Update : தமிழ் சினிமாவில் காமெடி மன்னன் என்று சொன்னால் அனைருக்கும் முதலில் ஞாபகம் வருவது கவுண்டமணி தான். சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் நகைச்சுவை உணர்வுடன் உள்ள கவுண்டமணி தமிழ் சினிமாவின் காமெடி சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர். தற்போது காமெடியில் அதிகம நடிகர்கள் நடித்து வந்தாலும், இன்று வரை கவுண்டமணியின் இடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை. இந்த அளவிற்கு தனது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை கட்டி வைத்துள்ளார்.

சிறுவர்கள் முதல் தற்போதைய இளைஞர்கள் முதியவர்கள் என 3 தலைமுறை ரசிகர்கள் தற்போது கவுண்டமணியின் காமெடியை ரசித்து வருகினறனர். மேலும் முன்னணி நாயகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடக்கத்தில் தனியாக காமெடியில் கலக்கிய அவர், அதன்பிறகு நடிகர் செந்திலுடன் இணைந்து பல படங்களில் மக்களை சிரிக்க வைத்துள்ளார்.

இவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்து இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி மட்டுமல்லாது வில்லன், குணச்சித்திரம் உள்ளிட்ட பலவேடங்களை ஏற்று நடித்து முத்திரை பதித்துள்ள கவுண்டமணி கடந்த 1939-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் படத்தூர் கிராமத்தில் பிறந்தவர். ஆனால் தனது வாலிப பருவத்தில் தனது பாட்டி வீடான பொள்ளாச்சிக்கும் உடுமலைக்கும் இடையே உள்ள வல்லகுண்டபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

கவுண்டமணியின் அக்காவும் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். முதலில் நாடகங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்திய பின்னாளில் சினிமா வாயப்பை பெற்று திரைப்படங்களில் நடித்துள்ளார். சுப்பிரமணி என்ற பெயர் பெற்ற இவர், ஒரு நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், கவுண்டமணி என்று பெயர் பெற்றதாக ஒரு தகவலும் உலா வருகிறது. சினிமா வாய்ப்பு பெற்ற இவர், நாகேஷ் நாயகனாக நடித்து கடந்த 1964-ம் ஆண்டு வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் டிரைவர் வேடத்தில் நடித்திருப்பார். இதுவே பெரிய திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம்.

அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், செல்வமகள்,ராமன் எத்தனை ராமனடி, தேனும் பாலும், அன்னக்கிளி, மேயர் மீனாட்சி உழைக்கும் கரங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து 1977-ல் கமல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக 16 வயதினிலே என்ற படத்தில் முழுநேர நடிகராக திரைப்படங்களில் நடித்தார். சுப்பிரமணி என்ற கேரக்டரில் ரஜினியின் நண்பர்களின் ஒருவராக நடித்திருப்பார் கவுண்டமணி.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து காமெடியில் கலக்கிய கவுணடமணி அந்த கால அஜித் என்று பலரும் கூறி வருகின்றனர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அஜித், படங்களில் ப்ரமோஷனுக்கு வருவதில்லை, அதிகம் பேட்டி கொடுப்பதில்லை, ரசிகர் மன்றத்தை கலைப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் கவுண்டமணி அந்த காலத்திலேயே ரசிகர் மன்றத்தை கலைத்துள்ளார். இன்றுவரை அவர் அதிகம் பேட்டி கொடுப்பதில்லை.

இந்நிலையில், கவுண்டமணியின் சொந்த ஊரான வல்லகுண்டபுரத்தில் சமீபத்தில் அவரது அக்காவை அர்ச்சுவ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற யூடியூப் சேனல் பேட்டி எடுத்துள்ளனர். அப்போது அவர் கூறுகையில்,

என் பெயர் மயிலாத்தாள். அவருடைய பெயர் சுப்பிரமணி. சினிமாவில் தான் கவுண்டமணி என்று மாத்திட்டாங்க. அவர் நாடகத்தில் கவுண்டர் ஆக நடித்ததாலும், நிறைய கவுண்ட் போட்டதாலும், அவரது பெயரை கவுண்டமணி என்று மாற்றிவிட்டார்கள். ஊரில் ஏதேனும் விசேஷம் என்றால் தான் கவுண்டமணி வருவார். ஆனால் தினமும் போனில் எங்களுடன் பேசுவார். எங்க அம்மா இறந்து 4 வருடங்கள் ஆகிறது. அப்போ வந்தது கவுண்டமணி இன்றும் வரவில்லை. ஆனால் போனில் மட்டும் பேசிக்கொள்வோம்.  

பன்னீர்செல்வம் டீக்கடையில டீ ஆத்திட்டு இருந்தார் என்று சொல்றாங்க ஆனால் அவர் இப்ப முதல் அமைச்சராக ஆகிட்டாரு. யாராலும் நம்ப முடியுதா? அந்த மாதிரிதான் கவுண்டமணி பெரிய நடிகனா வருவான் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவன் ஆறாவது ஏழாவதுதான் படிச்சிக்கிட்டு இருக்கும்போதே நாடகத்துக்கு போய்ட்டான் நிறைய நாடகங்கள் நடிச்ச அப்புறம் அவனுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. சென்னைக்கு சென்று நடிகன் ஆனார் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema lead actor goundamani lifestyle update his sister say about

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express