தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில். கமல்ஹாசனின் ரசிகர்கள் ப்ரமோஷன் களத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமை கமல்ஹாசனையே சாரும். உலக நாயகன் என்று ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றுள்ள கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந் 2018-ம் ஆண்டு விஸ்வரூபம் 2 படம் வெளியானது. அதன்பிறகு அரசியலில் களமிறங்கிய அவர் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாடாளுமன்றம் மற்றும் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்.
தற்போது அரசியல் பணிகளில் இடையில் திரைப்பட நடிப்பிலும் கவனம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வகையில் மாநகரம் கைதி மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் இந்த படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ்’ மூலம் கமல்ஹாசனே தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன்’, பகத் பாசில். விஜய் சேதுபதி, நரேன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பெரிய பரபரப்புக்கு மத்தியில் இந்த படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் கமல் நடிப்பில் 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துரையில் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், விக்ரம் படத்தை வித்தியாசமாக ப்ரமோட் செய்ய முயற்சித்த படக்குழு மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் பாணியை கையாண்டுள்ளது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் தனது படம் குறித்து நிகழ்ச்சிகளில் பேசும் தொகுப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு பின்னால் இருந்து பேசி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த வகையில் தற்போது ‘விக்ரம்’ படத்தை விளம்பரப்படுத்த ‘விக்ரம்’ குழுவினர் புனித் ராஜ்குமார் பாணியை கையில் எடுத்துள்ளனர். தங்களுக்கு பிடித்த நடிகர் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களே நேரில் வந்தால் அனைவரும் இன்ப அதிர்ச்சி இடைவது வழக்கம். அந்த வகையில் விக்ரம் படம் குறித்து பேசிய தொகுப்பாளர்களுக்கு நேரில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
‘விக்ரம்’ தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ட்விட்டர் ஈமோஜியை வெளியிட்டு அதிக கவனத்தை ஈர்த்த நிலையில். தற்போது படக்குழுவின் இந்த முயற்சி பெரிய கனவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil