வறுமை… தற்கொலை எண்ணம்… ரஜினிகாந்த் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

Rajinikanth Viral Speech : நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம். வறுமையில் இருந்தோம் என்று சொல்வதை விட வறுமையை அனுபவித்து வாழ்ந்தேன்.

Tamil Cinema Actor Rajinikanth Viral Speech : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், தனது அயராத உழைப்பின் மூலம் சூப்பர் ஸ்டாக உயர்ந்துள்ளார். தமிழில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொண்டுத்துள்ள ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த கடந்த தீபாவளி தினத்தில் வெளியானது

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தியதோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை ஒரு இளம் இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது வாழ்க்கை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார்.

ரஜினிகாந்த் நடிக்க வருவதற்கு முன்னாள் பஸ் கண்டக்டராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒரு தகவல். ஆனால் அவர் கண்டக்டர் ஆவதற்கு முன் எப்படி இருந்தார், கண்டக்டர் வேலை அவருக்கு எப்படி கிடைத்தது என்பதை பற்றி ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேச தொடங்கிய அவர், நான் நடிகனான ஆவதற்கு முன்பு ஆபீஸ்பாய், கார்பெண்டர், கூலி உள்ளிட்ட பல வேலைகளை செய்து வந்தேன்.

அதன்பிறகுதான் எனக்கு கண்டக்டர் வேலை கிடைத்து. எங்களது குடும்பம் மிடில் கிளாஸ் என்று சொல்வதை விட மிகவும் ஏழ்மையான குடும்பம் என்று சொல்லாம். நாங்கள் வறுமையில் இருந்தோம் என்று சொல்வதை விட வறுமையை அனுபவித்து வாழ்ந்தேன். அதனால் தான் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்று பணம் சம்பாதிக்க வைராக்கியத்துடன் போராடினேன். கூலி. கார்பெண்டர், கண்டக்டர் என பல வேலைகள் செய்த பிறகுதான் நடிகன் ஆனேன். அதேபோல் சிறுவயதில் இருந்தே பூர்வ ஜென்ம புண்ணியமோ என்று தெரிவயில்லை எனக்கு எதிலும் எந்த பயமும் கிடையாது.

அதையும் மீறி ஒருமுறை பயந்தேன். அப்போது தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கூட முடிவு செய்தேன். அப்போதான் நான் இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த மலையில் ஒரு சாமியாரின் புகைப்படம் இருந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு அமைதி கிடைத்தது. தற்கொலை எண்ணத்தை தள்ளி போடலாம் என்று நினைத்து வீ்டிற்கு சென்றுவிட்டேன். அப்போது நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் கனவில் தாடி வைத்த காவி உடை அணிந்த நபர் ஒருவர் ஆற்றுக்கு அந்த பக்கம் இருக்கிறார்.

நான் அவரிடம் செல்ல ஆந்நில் நீந்தாமல் ஊடி செல்கிறேன். உடனே கண்விழித்து பார்த்தால் அந்த புகைப்படத்தில் இருந்தவர்தான் என் கனவில் வந்தவர் என்று எனக்கு புரிந்தது. அதன்பிறகு தான் அவருடைய பெயர் கேட்டதற்கு ராகவேந்திரா சரி என்று சொன்னார்கள். அப்போதிலிருந்து அவருக்காக விரதம் இருந்து பூஜித்தி வருகிறேன். இப்படி ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு மோசனமான நிகழ்வு நடைபெறும் என்று கூறியிருந்தார்.

29 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema leading actor rajinikanth speech video going on viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express