தற்போதைய காலக்கட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒரு சில நடிகர்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள். அவர்கள் அறிமுகமான புதிதில் சமூகவலைதளங்கள் இல்லாத நிலையில், அவர்களின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் மட்டுமே வெளியாகி வந்தது.
தற்போது அந்த புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி இந்த நடிகர் யார் தெரியுமா? என்பது போன்ற கேள்விகளுடன் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு நடிகரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
90-களில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகர் ராம்கி. செந்தூரபூவே, இணைந்த கைகள், கருப்பு ரோஜா, இரட்டை ரோஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த ராம்கி நடிப்பில், 1988-ம் ஆண்டு வெளியான படம் இது எங்கள் நீதி. ராம்கி, ராதிகா, இணைந்து நடித்த இந்த படத்தில் நிழல்கள் ரவி, எஸ்.எஸ்.சந்திரன், செந்தில் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார். ஆக்ஷன் படமாக வெளியாக இந்த படத்தில் அந்த குழந்தை நட்சத்திரம் நாயகன் ராம்கியுடன் இணைந்து ஃபைட் பண்ணுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த குழந்தை நட்சத்திரம், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய் தான். இந்த படத்தை இயக்கியவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நாயகன் ராம்கிக்கு இணையாக, ஆக்ஷன் சீனுக்கு தயாராகி வருவது போல் விஜய் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“