திடீர் விசிட் அடித்த விஜய்… புன்னகையுடன் வரவேற்ற சூர்யா… படப்பிடிப்பு தளத்தில் சுவாரஸ்யம்

Tamil Cinema Update : முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா இருவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளது வைரலாக பரவி வருகிறது.

Tamil Cinema Actor Vijay And Surya Meet In Sun Studio : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் சூர்யா. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் இயக்குநர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

அதேபோல் பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்ம் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் ராஜ்கிரன், சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 21-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த இரண்டு படங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில்,  சென்னை பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் நேற்று விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதே ஸ்டுடியோவில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் நடந்துள்ளது.  

முன்னணி நாயகர்களான இருவர் படத்தின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடைபெற்றதால், உணவு இடைவேளையில் நடிகர் விஜய் சூர்யாவின் படப்பிடிப்புத் தளத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.  விஜயின் வருகையை பார்த்த  ‘எதற்கும் துணிந்தவன்’  படக்குழு இன்ப அதிர்சசியடைந்த நிலையில், சூர்யா விஜயை இன்முகத்துடன் வரவேற்றுள்ளார். அதன்பின் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றது குறித்து விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா. அதேபோல் கடந்த வாரம் வெளியான சூர்யாவின் ஜெய்பீம் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,  இதற்காக சூர்யாவிற்கு விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சநதிப்பு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்போல் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடந்தபோது அருகில் கார்த்தியின் ‘சர்தார்’ படப்பிடிப்பு நடந்தபோது, விஜய் திடீரென கார்த்தியை சந்தித்த நிகழ்வு வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema leading actors surya and vijay meet in shooting spot

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com