தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை : விஜய்யின் ஹிட் பட நாயகி ; இவர் யார்னு சொல்லுங்க!

விஜய்க்கு ஜோடியாக சில ஹிட் படங்களில் நடித்த நடிகையின் சிறுவயது புகைப்படம். இவரை யார்னு தெரியுதா?

விஜய்க்கு ஜோடியாக சில ஹிட் படங்களில் நடித்த நடிகையின் சிறுவயது புகைப்படம். இவரை யார்னு தெரியுதா?

author-image
WebDesk
New Update
Kajal Agarwal Childhood

முன்னணி நடிகையின் சிறுவயது புகைப்படம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீப காலமாக சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இவர் யார் தெரியுமா, என்று ஆர்வத்தை தூண்டும் வகையிலான கேள்விகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்தி சினிமாவில் அறிமுமான இவர், பரத்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர், அடுத்து விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நடிகை யார் தெரியுமா? அவர் தான் நடிகை காஜல் அகர்வால். கைன் ஹொ கயனா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லட்சுமி கல்யாணம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்த காஜல், பரத்க்கு ஜோடியாக பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

Kajal Agarwal Childhoo.jpg

Advertisment
Advertisements

தொடர்ந்து பொம்மலாட்டம், மோதி விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்த காஜல், 2010-ம் ஆண்டு நான் மகான் அல்ல என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு சூர்யாவுடன் மாற்றான், விஜயுடன், ஜில்லா, துப்பாக்கி, மெர்சல், அஜித்க்கு ஜோடியாக விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

2020-ம் ஆண்டு கெளதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வாலுக்கு தற்போது ஒரு குழந்தை உள்ள நிலையில், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kajal Agarwal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: