New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/03/taapsee-pannu2-980904.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நடிகை, 8 படங்களில் மட்டுமே தமிழில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை இவர்.
இணையத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் சினிமா ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமாக நடிகர் நடிகைகளின் விபரங்கள் குறித்து வலைதளங்களில் தேடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்க வருவதற்கு முன் என்ன செய்தார்கள்? எப்படி இருந்தார்கள்? அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்த விபரங்களை தேடி தேடி பார்த்து வருகின்றனர்,
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நடிகை தமிழில் நடித்தது 8 படங்கள் தான். இதில் தனுஷ்க்கு ஜோடியாக அறிமுகமான இவர், கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு இவர் தமிழில் நடிக்காத நிலையில், தற்போது இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் கிரிக்கெட் வீராங்கனையின் பயோபிக் படம் ஒன்று வெளியானது.
இப்போது தெரிகிறதா அந்த நடிகை யார் என்று? அவர் வேறு யாரும் இல்லை நடிகை டாப்சி பண்ணு தான். 2010-ம் ஆண்டு ஜோஹமுண்டி நாதம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், 2011-ம் ஆண்டு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான 2-வது படமாக ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அதன்பிறகு டாப்சிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் வரவில்லை.
ஜீவாவுடன், வந்தான் வென்றான் படம் கை கொடுக்கவில்லை என்றாலும், அஜித் ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான ஆரம்பம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து, லாரன்சின் காஞ்சனா 2, கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த அனபெல் சேதுபதி படம் தான் தமிழில் இவர் நடித்த கடைசி படம். அதன்பிறகு, இந்தியில் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
டாப்சி நடிப்பில், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிங்க் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிபடமாக அமைந்த நிலையில், தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை பெற்றது. கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பயோபிக் படமாக ஷபாஸ் மித்து படத்தில் டாப்சி மிதாலி ராஜ் கேரக்டரில் நடித்திருந்தார், இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது முலக் 2, காந்தாரி ஆகிய இந்தி படங்களில் டாப்சி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.