scorecardresearch

நயன் – விக்கி திருமணம்… எத்தனை பேருக்கு அழைப்பு? முகூர்த்தம் எப்போது?

Tamil Cinema Update : இதுவரை காதலர்களாக இருந்த விக்கி – நயன் ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

நயன் – விக்கி திருமணம்… எத்தனை பேருக்கு அழைப்பு? முகூர்த்தம் எப்போது?

Tamil Actress Nayantara Vignesh Shivan Marriage Update : தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் காதல் ஜோடி விக்னேஷ் சிவன் நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் வெளியில் சுற்றுவது தனி விமானத்தில் வெளிநாடு செல்வது குடும்ப நபர்களின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுவது என காதல் பறவைகளாக சுற்றிக்கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தை அதகளம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டனர். இதற்கு பதில் சொல்லும் விதமாக இதுவரை காதலர்களாக இருந்த விக்கி – நயன் ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

போடா போடி படத்தின் மூலம் இயக்குநாக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து அவர் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். அப்போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வரும் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அப்போது டிவி ஷோவில் பங்கேற்ற நயன்தாரா நிச்சயதார்த்தத்திற்கு திரை பிரபலங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை ஆனால் திருமணத்திற்கு கண்டிப்பான அழைப்போம் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து விக்கி நயன் திருமணம் வரும் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரம், மகாப்ஸ் ஃபவ் ஸ்டார் ஹோட்டலில் காலை 5.30 மணி முதல் 7 மணிவரை முகூர்த்த நேரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் விஐபி என்றும், ரஜினி அஜித், விஜய் உள்ளிட்டோர் இந்த விஐபி பட்டியலில் வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், விக்கியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதி, இயக்குநர் நெல்சன், நயன்தாராவின் நெருங்கிய தோழியான சமந்தா உள்ளிட்டோரும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற ஹிட் படத்தை கொடுத்த விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் நடிப்பில் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார். அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி சமந்தாவுடன் இணைந்து நடித்த நயன்தாரா, ஒ2, காட்ஃபாதர், கனெக்ட், த்ரில்லர், உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema leading actress nayanthara vignesh shivan marriage update