தமிழ் சினிமா லெஜண்ட்; பாலுமகேந்திரா தொப்பி ரகசியம் என்ன தெரியுமா? இயக்குனர் ராம் விளக்கம்!
சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர், என பன்முக திறமை கொண்ட பாலுமகேந்திரா தான் பணியாற்றி படங்களுக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர், என பன்முக திறமை கொண்ட பாலுமகேந்திரா தான் பணியாற்றி படங்களுக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர், என பன்முக திறமை கொண்ட பாலுமகேந்திரா தான் பணியாற்றி படங்களுக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். ஆனால் அவரை தொப்பி இல்லாமல் பெரும்பாலும் பார்க்கவே முடியாது. அதே சமயம் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் தொப்பி இல்லாமல் தரிசனம் கொடுத்துள்ளார். இது குறித்து இயக்குனர் ராம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisment
இலங்கை தமிழர் என்ற அடையாளத்துடன் தென்னிந்திய சினிமாவில் வெற்றி நாயகனகாக வலம் வந்தவர் பாலுமகேந்திரா. 1972-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பணிமுடக்கு என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர், 1977-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோகிலா படத்தின மூலம் இயக்குனராக அறிமுகமானார். சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர், என பன்முக திறமை கொண்ட பாலுமகேந்திரா தான் பணியாற்றி படங்களுக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, ரெட்டை வால் குருவி, வீடு, மறுபடியும், ஜூலி கனபதி, அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட படங்கள் அவரின் அடையாளமாக உள்ளன. கடைசியாக சசிகுமார் தயாரிப்பில் தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்திருந்த பாலுமகேந்திரா கடந்த 2014-ம் ஆண்டு மரணமடைந்தார். தனது வாழ்நாளின் கடைசிவரை அன்பும் காதலும், அதிகமாக கண்ட பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து பாலா, வெற்றிமாறன் என திறமையாக இயக்குனர்கள் தற்போது தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளனர்.
இவரிடம் உதவி இயக்குனராக இல்லாவிட்டாலும், மனதளவில் தான் பாலுமகேந்திராவின் மாணவன் என்று இயக்குனர் அமீர் பல மேடைகளில் கூறியுள்ளார். அவரை போலத்தான் இயக்குனர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்ட ராம் அடுத்து இயக்கியுள்ள படம் பறந்துபோ. மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக சாய் வித் சித்ரா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குனர் ராம், இயக்குனர் பாலுமகேந்திரா குறித்து பேசியுள்ளார்.
Advertisment
Advertisements
நான் முதன் முதலில் எழுதிய கதையை, எடுத்துக்கொண்டு இந்த கதைக்கு கேமராமேன் அவர் தான் என்று உறுதி செய்து பாலுமகேந்திராவிடம் சென்றேன். காலை 6 மணிக்கு அவர் என்னை அழைத்து ஒரு கேசட்டை ரெக்கார்டு போட்டுவிட்டு கதையை கேட்டார். முதல் பாதியை கேட்டு முடித்தவுடன், எக்ஸலண்டாக இருக்கிறது. நான் பண்றேன் என்று சொன்னார். அதன்பிறகு தான் வெற்றிமாறனிடம் என்னை பற்றி பெருமையாக பேசியுள்ளார். பாலுமகேந்திரா நான் கதை சொன்ன கேசட்டில் அவரது பெயரை எழுதி கொடுத்தார். அதை பார்த்தவுடன் என் கதைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அந்த படம் நடக்கவில்லை.
அதே சமயம், 3 ஆண்டுகள் நான் பாலுமகேந்திராவின் அலுவலகத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்தேன். பலரும் கேட்பார்கள் அவரை தொப்பி இல்லாமல் பார்த்திக்கிறீாகளா என்று கேட்பார்கள். ஆனால் அவரிடம் பழகும் விதத்தை வைத்து தான் அவர் தனது தொப்பியை யாருக்காக கழற்றுவார் என்று தெரியும். நான் அவரிடம் பழகிய 3-வது வாரத்தில் அவரை தொப்பி இல்லால் பார்க்கும் தரிசனம் கிடைத்தது என்று இயக்குனர் ராம் கூறியுள்ளார்.