தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் தொடங்கி தற்போதைய இளம் நடிகர்கள் வரை தனது இசையால் பல வெற்றிப்பால்களை கொடுத்த இவர், க்ளாசிக் இசையில் மெல்லிசை மன்னர் என்று பெயரெடுத்தவர். மெலடி பாடல்களை கொடுத்து படத்திற்கு வலிமை சேர்த்தவர் என்று சொல்லலாம்.
எம்.எஸ்.வி இசையில் பாடகர் டி.எம். சௌந்திரராஜன் பல பாடல்களை பாடியுள்ளார். இவர்களுக்கு இடையில் ஆழமான ஒரு நட்பு இருந்துள்ளது. அதே சமயம் பாடல் பாதிவின்போது பல சம்பவங்கள் அரங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் எம்.எஸ்.வி – டி.எம்.எஸ் இடையே நடந்த சுவாரஸ்யமாக நிகழ்வு ஒன்றை எம்.எஸ்.வி குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக பாரதிதாசன் பாடல்களுக்கு இசையமைத்த பெருமை கொண்ட எம்.எஸ்.வி அவரின் குருநாதர் பாரதியார் பாடலுக்கும் இசையமைத்துள்ளார். அந்த வகையில் 1964-ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கை கொடுத்த தெய்வம் என்ற படத்தில் பாரதியாரின் சிந்து நதியின் இசை நிலவினிலே என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.
இந்த பாடலை பாரதியார் எழுதிக்கொண்டே பாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷணன் கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி அப்படியே டியூன் செய்துள்ளார். இந்த பாடலை பாடிய டி.எம்.எஸ் இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி இசையமைத்ததுபோல் இல்லை பாரதியாரே இசையமைத்தது போல் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.எஸ்.வி அவர் வாயில் இருந்து இந்த மாதிரி ஒரு வாழ்த்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”