சினிமாவில் நகைச்சுவையில் உச்சம் தொட்ட நாகேஷ் கவிஞர் வாலியுடன் நெருங்கிய நட்பு இருந்தாலும், இவர்கள் இருவருக்கமான முதல் சந்திப்பு மோதலில் தான் தொடங்கியுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்த வாலி, ஒருமுறை சும்மா தானே இருக்கிறோம் என்று தனது நண்பர் நடித்த தாமரைக்குளம் படத்தின் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாலியின் நண்பன் கோபி அந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார். வாலி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, அவருக்கு ஒரு நடிகைரை கோபி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவருக்கு இதுதான் 2-வது படம் பேர் குண்டுராவ் என்று கூறியுள்ளார்.
அவரை பார்த்த வாலி, நடிப்பதற்கு உண்டான எதுவுமே இவரிடத்தில் இல்லை, என்று சொல்ல, அவர் ரயில்வேயில் வேலை செய்கிறார் என்று கோபி கூறியுள்ளார். இதை கேட்ட குண்டுராவ், ரயில்வேயில் வேலை செய்தேன். ஆனால் நடிப்பின் மீது உள்ள ஆசையால், வாய்ப்பு தேடி அலைவதற்காக வேலையை விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த உடலை வைத்துக்கொண்டு உங்களுக்கு நடிப்பு ஆசை வந்ததே தப்பு என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.
மேலும் எந்த நம்பிக்கையில் நீங்கள் ரயில்வே வேலையை விட்டுட்டு சினிமாவில் நடிக்க வந்துருக்கீங்க என்று கேட்க, கோபப்பட்ட குண்டுராவ், நீங்கள் கூட தான் சினிமாவில் பாடல் எழுத வந்திருக்கிறீங்க, எந்த நம்பிக்கையில் வந்தீங்க, நீங்கள் என்ன பெரிய புலவரா என்று கேட்டுள்ளார். இப்படி தொடக்கத்தில் மோதலாக தொடங்கிய இவர்களின் சந்திப்பு நாளடைவில் பிரிக்க முடியாத நட்பாக மாறியது.
அந்த புதுமுக நடிகர் குண்டுராவ் தான் பின்னாளில் நாகேஷ் என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் யாரும் மறக்க முடியாத பல நிகழ்வுகளை நடத்திக்காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 1959-ம் ஆண்டு வெளியான தாமரைக்குளம் படம் நாகேஷ் நடித்த 2-வது படமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“