New Update
/indian-express-tamil/media/media_files/Sv2SVn9Ge524XYNacFVW.jpg)
Legend Saravanan
Legend Saravanan: சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளராக லெஜண்ட் சரவணா, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
Legend Saravanan
கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் அடுத்து படத்தை லெஜெண்ட் சரவணா நாயகனாக நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளராக லெஜண்ட் சரவணா, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ஜேடி- ஜெர்ரி இணைந்து இயக்கிய இந்த படம் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி பிரபல நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து லெஜண்ட் சரவணா அடுத்து கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இந்த படத்தில்,இருவர் உள்ளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிப்பில் கோல் மால் என்ற படம் வெளியீட்டுக்கு தாயராக உள்ளது.
அதேபோல் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ஷாம் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் உள்ள பணிக்க நாடார் குடியிருப்பு கிராமத்தில் லெஜண்ட் சரவணனின் சொந்த ஊரில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, படத்தின் சில பகுதிகள் சென்னையில் படமாக்கப்பட்டன, அதே நேரத்தில் ஜார்ஜியா, மும்பை மற்றும் டெல்லியிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொழிலதிபராக இருந்து நடிகராக மாறியுள்ள நிலையில், தான் அரசியலுக்கு வருவது குறித்த தனது நிலைப்பாடு குறித்து பேசியிருந்தார். தற்போது படங்களில் பிசியாக இருப்பதால் அரசியல் வாழ்க்கை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலில் நுழைவதற்கான கதவை திறந்து விடுவேன் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.