New Update
/indian-express-tamil/media/media_files/vCos8AWWvhCQcCFJu8VM.jpg)
லெஜண்ட் சரவணா நியூ ஸ்டைல்
தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்ற லெஜண்ட் சரவணா, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
லெஜண்ட் சரவணா நியூ ஸ்டைல்
தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் தலைவர் அருள் சரவணன் அடுத்து படத்திற்கு தயாராகி வரும் நிலையில், தற்போது அவரின் புதிய கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்ற லெஜண்ட் சரவணா, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கியிருந்த நிலையில், ஊர்வசி ருத்வாலா என்பவர் நாயகியாக நடித்திருந்தார்.
மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தில், விஜயகுமார், நாசர், சுமன், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், அருள் சரவணன் அடுத்த படம் குறித்து அறிவிப்பு எப்போது வரும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தது.
தற்போது அடுத்த படத்திற்காக தீவிரமாக தயாராகி வரும் லெஜண்ட் சரவணா, காஷ்மீரில் லொக்கேஷன் பார்க்க சென்றுள்ள நிலையில், அங்கிருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் லெஜண்ட் சரவணாவின் அடுத்த படத்தை, காக்கிச்சட்டை கொடி ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே குறுந் தாடியுடன் நடிகர் அருள் சரவணன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து நடிக்க உள்ள படம் குறித்து எதிர்ப்பை அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.