தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் அழியாத ஃபாஸ்ட் பீட் சூப்பர் ஹிட் பாடலான ’ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாடலுக்கு எம்.ஜி.ஆர் முதலில் ஆட மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில், சில பாடல்களை எப்போதுக் கேட்டாலும் ஆடத் தோன்றும், அந்த வகையில் 55 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடலை இப்போது கேட்டாலும் ஆடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்றும் இசைக் கச்சேரிகள், நடன நிகழ்வுகள், பள்ளி விழாக்களில் இந்தப் பாடல் தவறாமல் இடம்பெறும்.
இதையும் படியுங்கள்: நான் செய்த தவறு… எம்.ஜி.ஆர்-க்கு வந்த கோபம்: பிரபல காமெடி நடிகர் கண்ணீர்
1968 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் குடியிருந்த கோயில். இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தப் படத்தில் பஞ்சாப்பின் பங்காரா டான்ஸ் அமைப்பில் உருவாகியிருந்தது தான் ’ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாடல். இந்த பாடலுக்கு விஜயலெட்சுமியுடன் எம்.ஜி.ஆர் டான்ஸ் ஆடியிருப்பார்.
இந்த பாடலுக்கு விஜயலெட்சுமியுடன் டான்ஸ் ஆட வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தப்போது, அவர் மறுத்துவிட்டாராம். விஜயலெட்சுமி பிறக்கும்போதே காலில் சலங்கை கட்டி ஆடியவர், அவங்களோட நான் ஆடுவது சரியா இருக்காது என மறுத்தாராம். ஆனால் இயக்குனரும் தயாரிப்பாளரும் வற்புறுத்தி ஆடவைத்தார்களாம்.
இருப்பினும் எம்.ஜி.ஆர் நான் ஒரு வாரம் பயிற்சி எடுத்துட்டு ஆடுறேன், பாடல் படம்பிடிக்கப்பட்டவுடன் முதலில் நான் தான் பார்ப்பேன். எனக்கு பிடித்திருந்தால் தான் நீங்கள் எல்லாம் அந்த பாடலை பார்க்கவே முடியும் என கண்டிசன் போட்டராம். எம்.ஜி.ஆர் அதற்கு முன்னர் இதேபோன்று சில பாடல்களுக்கு நடனமாடியிருந்தாலும், பங்காரா டான்ஸ் கடினம் என்பதாலும் ஆட மறுத்தாராம்.
இந்த பாடலுக்கு எம்.ஜி.ஆர் நடனம் ஆடும்போது அவருக்கு வயது 55. ஆனால் சூட்டிங் முடிந்தப் பிறகு விஜயலெட்சுமி எம்.ஜி.ஆரிடம் உங்க அளவுக்கு என்னால் ஆடமுடியவில்லை என பாராட்டினாராம். இந்த படத்தில் தனது நடன பாணியிலிருந்து மாறுபட்டு எம்.ஜி.ஆர் டான்ஸ் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“