Advertisment
Presenting Partner
Desktop GIF

எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு; மிரட்டல் வந்தாலும் பயப்படாத கண்ணதாசன்

கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது; அதை தாண்டி நட்பும் தீவிரமாக தொடர்ந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MGR and Kavignar Kannadasan, MGR, Kavignar Kannadasan, MGR and Kavignar Kannadasan interesting real life information, DMK, Panathottam movie song, kannadasan lyics writes for MGR, கடவுள் பக்தியால் தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் சந்தித்த நெருக்கடி, சினிமா பாடல் மூலமாக உதவிய கண்ணதாசன், எம் ஜி ஆர், கண்ணதாசன், திமுக, அண்ணா, பணத்தோட்டம் படம், MGR and Kavignar Kannadasan information

எம்.ஜி.ஆர் - கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன், எம்.ஜி.ஆருடன் மிகுந்த நட்புடன் இருந்தாலும், சில விஷயங்களில் முரண்பட்டு இருந்தார், அந்த சுவாரஸ்ய விஷயங்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன். க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர் – சிவாஜி படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.  காலங்கள் பல கடந்தாலும் கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல பாடல்கள் இன்றைய ரசிகர்கள் ரசிக்கும்படி உள்ளது. வாலி வருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் அனைத்து அரசியல் பாடல்களிலும் தனது வார்த்தை ஜாலத்தை வைத்து வெற்றியை கொடுத்தவர் கண்ணதாசன். அதேபோல் கண்ணதாசன் மீது அதிகமான நட்பு வைத்திருந்த எம்.ஜி.ஆர்,  அவரை அரசவை கவிஞராக்கி அழகு பார்த்தார். கண்ணதாசன், எம்.ஜி.ஆருடன் மிகுந்த நட்புடன் இருந்தாலும், சில விஷயங்களில் முரண்பட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்: கண்ணதாசனை வீட்டிற்குள் வைத்து பூட்டி எம்.ஜி.ஆர்… இந்த ஹிட் பாடல் உருவான கதை இதுதான்

இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு கண்ணதாசன் மகள் ரேவதி அளித்த பேட்டியில், கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. தினமும் தினமும் சண்டை நடக்கும் அளவுக்கு முரண்பாடுகள் இருந்தது. அரசியல் கருத்துக்கள் தொடர்பாக கண்ணதாசனுக்கு நிறைய மிரட்டல்களும் வந்துள்ளது. ஆனால் கண்ணதாசன் எந்தச் சூழ்நிலையிலும் பயப்பட்டதில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால், இந்த அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் பெரிய பிரச்சனையாக மாறவில்லை. இதேபோல் கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கு.

1976-77 களில் கண்ணதாசன் பாடல்களை எழுதுவதை குறைத்துக் கொண்டார். ஒரு பிரபல இயக்குனர் கண்ணதாசனை மரியாதைக் குறைவாக நடத்தியதால் தான் அவர் பாடல்கள் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் படங்களில் மட்டும் இனி பாடல்கள் எழுதுவது என கண்ணதாசன் முடிவு செய்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Mgr Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment