சிவாஜி நடித்த வெற்றிப்படத்தில் தனக்கு பாடல் பாட வாய்ப்பு வேண்டும் என்று எம்.ஆர்.ராதா எம்.எஸ்.வியிடம் கேட்க, அவரோ இது நான் எடுத்த முடிவு அல்ல இயக்குனரின் முடிவு என்று கூறி இயக்குனர் பீம்சிங்கிடம் அனுப்பியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கிய உதாரணம் என்று சொன்னால் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஆனால் அவருக்கே பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. நாடக உலகில் கொடிகட்டி பறந்த எம்.ஆர்.ராதா அதன்பிறகு சினிமாவில் நடிக்க வந்தார். சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தபோதும், நலிவடைந்துள்ள நாடக கம்பெனிகளை தூக்கி நிறுத்தும் வகையில் அவர்களின் நாடகளிலும் நடித்து வந்துள்ளார்.
அப்படி நாடகங்களில் நடிக்கும்போது தான் சிவாஜிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராக உயர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகவேல் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றும் ஒரு முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.
அந்த வகையில், சிவாஜி கணேசன் நடித்த பாவ மன்னிப்பு படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் எம்.ஆர்.ராதா. இந்த படத்தின் பாடல் கம்போசிங் நடைபெறும்போது, எம்.ஆர்.ராதா ஷூட்டிங் வந்துள்ளார். அப்போது எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடல் ரெக்கார்டிங் நடந்துள்ளது. நாகூர் ஹனிபா இந்த பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை தூரத்தில் இருந்து கேட்க எம்.ஆர்.ராதா, அங்கே வந்து எம்.எஸ்.வியிடம் இந்த பாடல் வித்தியாசமாக இருக்கு எனக்கு பாட வாய்ப்பு கொடுக்க கூடாதா என்று கேட்டுள்ளார்.
Advertisment
Advertisement
மேலும் எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள். நாடகங்களில் நான் பாடலும் பாடி இருக்கிறேன். இந்த பாடல் வாய்ப்பை எனக்கு கொடுக்காமல், வேறு யாருக்கோ கொடுத்துவிட்டீர்களே என்று கேட்க, இது நான் எடுத்த முடிவு இல்லை. இயக்குனர் பீம்சிங் எடுத்த முடிவு. அவரிடம் போய் கேளுங்கள் என்று சொல்ல, எம்.ஆர்.ராதா பீம்சிங்கை சந்தித்தபோது, இது நல்ல உள்ளம் கொண்டவர் பாடும் பாடல். நீங்கள் இதில் வில்லன் அதனால் உங்களுக்கு செட் ஆகாது. உங்களுக்கு வேறு பாடல் தருகிறேன் என்று கூறி சமாதானம் செய்துள்ளார். இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“