Advertisment

Leo Box Office Collection Day 16: ஜெயிலர் வசூலை நெருங்கிய லியோ; இன்னும் இத்தனை கோடி தேவை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம், ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் 2.0 படங்களுக்குப் பிறகு மூன்றாவது வெற்றிகரமான தமிழ்ப் படமாக உருவெடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Leo Box Office oct

விஜய் நடித்த லியோ திரைப்படம் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க : Leo box office collection day 16: Vijay-starrer earns over Rs 557 crore, has to earn over Rs 46 crore to surpass Jailer’s collection

Advertisment

தளபதி விஜய் நடிப்பில் ஆயுதபூஜை பண்டிகையில் வெளியான லியோ திரைப்படம் வசூலில் பெரிய சாதனை படைத்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் பட வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் உலகளவில் ரூ500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, லியோ படம் வெளியான 16-வது நாளில், மூன்றாவது வெள்ளிக்கிழமை இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ 2.2 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் லியோ படத்தின் இந்திய பாக்ஸ்ஆபீஸ், வசூல் ரூ 319.8 கோடியாக உள்ளது. சென்னையில், லியோ இன்னும் 597 காட்சிகளில் 20.30% ஆக்கிரமிப்புடன் கொண்டுள்ளது.

இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் தற்போது ரூ.557.8 கோடியாக உள்ளது. ரஜினியின் ஜெயிலர் (2023) மற்றும் 2.0 (2018) ஆகிய படங்களைத் தொடர்ந்து, எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் லியோ மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படம் உலகம் முழுவதும் ரூ.604 கோடி வசூல் செய்தது. ஜெயிலரின் சாதனையை முறியடிக்க லியோ இன்னும் 46.2 கோடி தேவை.

விஜய்யின் படம் வெளியாகும் முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவை நடத்தி அதில் சில சர்ச்சைகளை கிளப்பினார் விஜய். படத்தை தனிப்பட்ட முறையில் பார்க்காமல், ஒரு சினிமாவாக பார்க்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

நீங்கள் பார்த்தால், உலகம் முழுவதும் சினிமா என்பது ஏதோ ஒரு செயற்கையான பொழுதுபோக்காகவே பார்க்கப்படுகிறது. அந்த சினிமாவில் நல்லவனும் கெட்டவனும் இருப்பான். இந்த இரண்டையும் வேறுபடுத்த, சில விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம் நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. உங்கள் அனைவருக்கும் ஏற்கனவே தெரியும் என்று எனக்குத் தெரியும் என கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment