Advertisment

லியோ படத்தில் விஜய் நடிப்பு எப்படி? கேமராமேன் மனோஜ் பரமஹம்சா கொடுத்த அப்டேட்

லியோ படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளுக்காக பல நேர்காணல்களில் கலந்துகொண்டு லியோ குறித்து தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Leo Manoj

லியோ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் விஜய் எவ்வாறு நடித்திருக்கிறார் என்பது குறித்து படத்தின் ஒளிப்பதிவானர் மனோஜ் பரமஹம்சா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 19-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு 5 நாட்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்துள்ள தமிழக அரசு படததிற்காக அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 'லியோ' படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழகத்தில் சிறப்பு காலை காட்சிகளுக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளதால் 'லியோ' படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளுக்காக பல நேர்காணல்களில் கலந்துகொண்டு லியோ குறித்து தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வெளியிட்டுள்ள தகவலில் லியோ படத்தில் விஜய் எப்படி நடித்துள்ளார் என்பது குறித்த பேசியுள்ளார்.

'லியோ' இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் பலருக்கும் நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பரமஹம்சா, லோகேஷ் கனகராஜின் திரைப்படத் இயக்கத்தின் பார்வையையும், விண்டேஜ் பாடல்களை அவர் உபயோகத்தையும் பாராட்டியுள்ளார். மேலும், அதிரடி ஆக்ஷன் பின்னணியில் தயாராகியுள்ள லியோ படத்தின் மேக்கிங் மற்றும் ஐமாக்ஸ் திரைகளுக்கு காட்சிகள் எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த குறுகிய காலத்தில் படத்தை உருவாக்க தனக்கு உதவிய அனைத்து உதவியாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் 'லியோ' படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

திறமையான ஒளிப்பதிவாளர் என்ற அடையாளம் கொண்ட மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்த லியோ படம் முதல் முறையாக ஐமேக்ஸில் வெளியாக உள்ளதால், அவருக்கு இந்த படம் மறக்க முடியாத படமாக இருக்கும். விஜய்யின் முந்தைய படங்களான 'நண்பன்', 'பீஸ்ட்' ஆகிய படங்களுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment