லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினாலும், மோசடி அம்பலமானதால் தயாரிப்பாளர் சரியான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் 2-வது படம் லியோ. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸின் ஒரு பகுதியாக தயாராகி வரும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.
லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் செப்டம்பர் 30-ந் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக விழா ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டது. இதனிடையே தற்போது விழா ரத்து செய்ய காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ’லியோ' இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்த சென்னை நேரு ஸ்டேடியத்தில் 6,000 முதல் 10,000 பேர் வரை பங்கேற்கலாம்.
/indian-express-tamil/media/media_files/w3KjsXk5gRE2u6CsxDM3.jpg)
ஒரு சிலர் போலி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ்கள் அச்சிடப்பட்டு ரூ.3000 முதல் ரூ.6000 வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 'லியோ' இசை வெளியீட்டு விழாவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், சிலர் இந்த நிகழ்ச்சிக்காக போலி டிக்கெட்டுகளை விற்று பணம் சம்பாதிக்க முயன்றுள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக 'லியோ' இசை வெளியீட்டு விழாவிற்கான போலி பாஸ்களை விற்பனை செய்யும் தொலைபேசி உரையாடல் மற்றும் வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சிலர் தயாரிப்பு நிறுவனத்தை கேலி செய்து வருகின்றனர். ஆனால் லியோ படத்தின் வெளியீட்டிற்கான பரபரப்பை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் படத்தை பற்றிய அப்டேட்கள் கொடுத்து வரும் நிலையில், பலர் சமூக ஊடகங்களில் #WeStandWithLeo என்ற ஹேஷ்டேக் மூலம் தயாரிப்பாளர்களுக்கான ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“